SJK(T) CHETTIARS - உலகக் கிண்ண சிலம்பப் போட்டியில் மகத்தான சாதனை

கடந்த 4.10.2019ஆம் நாளன்று கெடாவிலுள்ள டேசாகு நகராண்மைக் கழக அரங்கத்தில் நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ண சிலம்பப் போட்டியில் ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி மாணவர்களாகிய செல்வன் தீரன் ராஜ் யுவராஜி (ஆண்டு 3) முதல் நிலையிலும், செல்வன் ஏரித் கிஷோதரன் (ஆண்டு 1)  முதல் நிலையிலும் மற்றும் செல்வன் வினாஷ் கிஷோதரன் (ஆண்டு 3) இரண்டாம் நிலையிலும் மகத்தான வெற்றியைக் கண்டனர்.
 
 
 
 
இந்த வெற்றியின் மூலமாக அம்மூன்று மாணவர்களும்  பெற்றோருக்கும்,  பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டியில் வங்காள தேசம், கம்போடியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வந்திருந்த சிலம்பப் போட்டியாளர்களுடன் இம்மூவரும் போட்டியிட்டு மகத்தான வெற்றியை அடைந்து நம் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். 
 
 

செல்வன் தீரன் வயது நான்கு முதல், இச்சிலம்பப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செல்வன் வினாஷ் மற்றும் செல்வன் ஏரித் கடந்த மூன்று வருடங்களாக இப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 
 
2 orang murid SJK(T) Chettiars, Ipoh menjadi Johan dan seorang murid memenangi Naib Johan dalam Pertandingan Silambam Peringkat Antarabangsa
 
இம்மாணவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவதோடு இம்மாதிரியான புறப்பாட நடவடிக்கைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அவ்வப்போது மாவட்டம் மற்றும் மாநிலப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டு கோப்பைகளையும் நற்சான்றிதழ்களையும் பெறுவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கின்றது. 
 
 
ஒவ்வொரு மாணவரும் தங்களின் நேரத்தைச் சரியான முறையில் நிர்வகித்துக் கொண்டு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொண்டால் சிறந்த எதிர்காலத்தை அடைய முடியும் என்பது திண்ணம். 

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை