SJK(T) TUN SAMBANTHAN – சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம் #2


நாட்டு மக்கள் குடும்ப மேம்பாட்டு வாரியம் [LEMBAGA PENDUDUK DAN PEMBANGUNAN KELUARGA NEGARA (LPPKN)] பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக PEKERTI SJK(T) எனப்படும் சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம் (PROGRAM PENDIDIKAN KESIHATAN REPRODUKTIF DAN SOSIAL) பயிலரங்கைப் பாகான் டத்தோ மாவட்டம், துன் சம்பந்தன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடத்தியது.

17.10.2019 செவ்வாய்கிழமை நடந்த இந்தப் பயிலரங்கத்திற்குத் துன் சம்பந்தன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.இரா.தமிழ்ச்செல்வி அவர்கள் தலைமை தாங்கினார். 


துன் சம்பந்தன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பிளாமிங்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, தெலுக் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோல பெர்னாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய 4 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். மாலை மணி 2:00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை மணி 5:00க்கு நிறைவடைந்தது.





சமூகச் சூழலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் பற்றி விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், பாலியல் பாதுகாப்பு பற்றியும் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கப்பட்டன. விளக்கவுரை மற்றும் குழு நடவடிக்கை முறையில் நடைபெற்ற இந்த பயிலரங்கம் மாணவர்களைக் கவரக்கூடிய வகையில் அமைந்தது. அதோடு, மிகவும் பயனாகவும் அமைந்தது.


நாட்டு மக்கள் குடும்ப மேம்பாட்டு வாரிய  (LPPKN) பேரா மாநில உதவி இயக்குநர் லோகராணி மதிவாணன் மற்றும் அதிகாரிகளான எழிலரசி மீரா, முகனேஸ்வரி சுப்பிரமணியம் ஆகிய மூவரும் மிகச் சிறந்த முறையில் வழிநடத்தினார்கள். கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

 


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு