2019ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் நடடிக்கைகள், போட்டிகள், வெற்றிகள், சாதனைகள் ஆகியவை மின்னூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
4, 5, 6ஆம் ஆண்டு தமிழ்மொழிப் பாட வாக்கியம் அமைத்தல் பயிற்றி இங்கே வழங்கப்படுகின்றது. கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் இதனை உருவாக்கியுள்ளார். வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்கள் பயிற்சிகள் செய்வதற்கு இந்தப் பயிற்றி பயன்படும். இதனைப் பொதுப் பகிர்வுக்காக வழங்கி உதவிய ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. இங்கே சொடுக்கவும்
தமிழ்மொழி கருத்துணர்தல் தாள் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 இதனை அச்செடுத்து பயிற்சியாகச் செய்யலாம். இந்தத் தொகுப்பில் மொத்தம் 20 பயிற்சிகள் உள்ளன. தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு ஆக்கம் : ஆசிரியர் திருமதி நளினி ஜெயராமன் [கோத்தா பாரு தமிழ்ப்பள்ளி, பேரா], ஆசிரியர் திருமதி வாசுகி முருகையா [கோப்பெங் தமிழ்ப்பள்ளி, பேரா] மின்நூலைப் பார்க்க படத்தைச் சொடுக்கவும். CLICK TO VIEW FLIPBOOK மின்நூலைப் பதிவிறக்கம் செய்ய இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO DOWNLOAD ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
வாய்பாடு கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள் மாணவர்களே.! உங்கள் திறமையைச் சோதித்துப் பாருங்கள். WORDWALL : வாய்ப்பாடு கணிதப் புதிர் ஆக்கம் : ஆசிரியர் ரா.ரூபா பள்ளி : கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி, பேரா கீழே உள்ள படத்தைச் சொடுக்கவும் CLICL TO PLAY ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
தமிழ்ப்பள்ளிகளுக்கான கலைத்திட்டங்களும் [DSKP] அண்டுத் திட்டங்களும் [RPT] இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் இந்த அரும்பணியைச் செய்துள்ளார். ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையிலான கலைத்திட்டங்கள் தமிழ்மொழியில் இங்கு கிடைக்கும். [படத்தைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்யவும்] [sila klik gambar diatas untuk DOWNLOAD] தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் நன்மை கருதி ஐயா அவர்கள் தம்முடைய வலைப்பதிவில் பல்வேறு ஆவணங்கள், கலைத்திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள், வினாத் தாள்கள், பயிற்றிகள் ஆகியவற்றைத் தமது வலைப்பதிவில் தொகுத்து வைத்துள்ளார். தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திரு.முனியாண்டி ராஜ் - En.Muniandy Raj, Guru Cemerlang Bahasa Tamil SJK(T) Telok Panglima Garang, Selangor. தமிழ்ப்பள்ளி நலன்கருதி தமிழ் உள்ளத்தோடும் தொண்டு மனப்பான்மையோடும் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் மேற்கொண்டுவரும் இந்த நற்பணியைப் போற்றி பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம். அவருடைய வலை...
காணொலி இணைப்பு ⏭ நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை முன்னிட்டு மாணவர்களுக்கு மின்கற்றல் அல்லது இணையம் வழி கற்றல் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக, கீழ்க்காணும் காணொலி ஆசிரியர்களுக்கு மிகவும் பயனாக அமையும். ஆசிரியர்கள் QUIZIZZ மென்பொருள் மூலம் புதிர்கள் உருவாக்கி தங்கள் மாணவர்களுக்குப் (பெற்றோர் கைப்பேசி வழி) பகிரலாம். Creating a Quiz Tutorial for Quizizz Creating a Quiz in Quizizz CARA MENGGUNAKAN QUIZIZZ ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
காணொலி இணைப்பு ⏭ தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தே பயில்வதற்குத் தமிழ்மொழிப் பாடங்கள் காணொலி வடிவத்தில் கீழே தரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப் பகிர்ந்து பயன்பெறச் செய்யலாம். Youtube காணொலியில் தமிழ்மொழிப் பாடங்கள் ஆக்கம் : ஆசிரியர் திரு.சிவக்குமார் ஆறுமுகம் பள்ளி : ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி, பேரா. தலைப்பு 1: இலக்கண மரபு [ஒரு/ஓர், அது/அஃது/ இது/இஃது] தலைப்பு 2: எழுத்தியல் - இன எழுத்துகள் தலைப்பு 3 : எழுத்தியல் - வினா எழுத்து தலைப்பு 4 : சொல்லியல் - எண் தலைப்பு 5 : சொல்லியல் - திணை தலைப்பு 6 : எச்சம் [பெயரெச்சம், வினையெச்சம்] தலைப்பு 7 : அடை [பெயரடை, வினையடை] தலைப்பு 8: வினைமுற்று தலைப்பு 9 : வாக்கிய வகைகள் [குன்றியவினை, குன்றாவினை வாக்கியம்] தலைப்பு 10 : வாக்கிய வகைகள் [செய்வினை / செயப்பாட்டுவினை] தலைப்பு 11 : இலக்கணம் [வலிமிகும் இடங்கள்] தலைப்பு 12 : இலக்கணம் [வலிமிகா இடங்கள்] YOUTUBE காணொலி தம...
➽தலைப்புகளைச் சொடுக்கி பக்கத்திற்குச் செல்லவும் / CLICK TITLES 1. SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள் 2. YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் 3. ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம் 4. Youtube தமிழ் விடுகதை விளையாட்டு 5. Youtube காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1 6. தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் - ஐவிரல் நுட்பம் 7. யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழி - பெயரெச்சம் 8. விழுக்காடு கணக்குகள் - வழிகாட்டி 9. TRIAL UPSR PAPERS- முன்னோடித் தேர்வுத் தாள்கள் 10. ஓம் தமிழ் - 25 தமிழ்க்கல்விச் செயலிகள் 11. யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி 12. SPOKEN ENGLISH - மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசலாம் 13.Youtube காணொலி மூலம் கணிதப் பாடங்கள் [ஆண்டு 6] 14. GOOGLE CLASSROOM மூலம் 30 கணிதப் பாடங்கள் 15. கட்டுரை எழுதுவதில் பொன்மொழிகளின் பயன்பாடு 16. சொல்வளம் 2.0 - திறன்பேசியில் தமிழ் விளையாட்டு 17. GOOGLE CLASSROOM : மாணவர்கள் நுழைவது; பாடம் செய்து அனுப்புவது எப்படி? 18. BUKU TEKS KPM : மின்னிய...
பேரா , பத்தாங் பாடங் மாவட்டம் , தேசிய வகை சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வடமலேசிய நிலை தொழில்நுட்பக் கண்காட்சி போட்டியில் முதல் இடத்தை வெற்றிகண்டு பளிதனம் ( PLATINUM ) பதக்கத்தை வாகை சூடினார்கள். SJK(T) Slim River menang Johan dan Pingat Platinum dalam Pertandingan ICT & Robotik Peringkat Kebangsaan (Zon Utara) pada 7 November 2019 7.11.2019 ஆம் நாள் வியாழக்கிழமை வடமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் & எந்திரவியல் ( NORTHEN REGION ICT & ROBOTIC COMPETITION 2019 ) போட்டி பினாங்கு பட்டர்வெர்த் நகரில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 3 வகையான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவை , தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டி ( ICT QUIZ), தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கண்காட்சி ( ICT FAIR) மற்றும் ரேரோ ரோபோட்டிக் போட்டி ( RERO ROBOTIC COMPETITION). சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி 3 போட்டிகளிலும் பங்கெடுத்தது. சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் க.பிரவின் கு...
அக்டோபர் 27-ஆம் தேதி ஒரே நேரத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00 மணிக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலும் மலேசிய நேரப்படி மாலை 5.00 மணிக்கு பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியிலும் இந்த இணையம் வழிக் கல்விப் பரிமாற்றத்தை முன்னிட்டு சிறப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் சிறப்புரை ஆற்றினார். கடந்த 2015-இல் மலேசியக் கல்வி அமைச்சு உருமாற்றுப் பள்ளித் திட்டத்தினைத் (Program Sekolah Transformasi TS25) தொடங்கியது. அதற்காக மலேசியாவில் உள்ள 100 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் இடைநிலைப்பள்ளி, தேசியப்பள்ளி, சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளி என 100 பள்ளிகள் இடம்பெற்றன. மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள் சார்பில் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் படிக்க,,
Comments
Post a Comment