SJK(T) BANDAR SRI SENDAYAN - எதிர்காலத் தமிழ்ப்பள்ளிக்கு அடைவுக் குறியீட்டுப் பயணம்

நெகிரி செம்பிலான், பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளிக்குப் பேரா, பத்தாங் பாடாங் மாவட்ட ஆசிரியர் குழுவினர் அடைவுக் குறியீட்டுப் பயணம் மேற்கொண்டனர். பத்தாங் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. 03.10.2019 வியாழக்கிழமை இந்த ஒரு நாள் பயணம் நடைபெற்றது.

பள்ளியின் தோற்றுநர் டத்தோ யோகேந்திரன் நாராயணசாமி, தலைமையாசிரியர் திருமதி சாந்தி அச்சுதன் இருவருடன்

பயணக் குழுவினர்

பத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள 19 தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் துணைத் தலைமை ஆசிரியர்களுமாக மொத்தம் 38 பேர் இதில் கலந்துகொண்டனர். இவர்களுடன் பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்திலிருந்து அமைப்பாளர் திரு,சுப.சற்குணன் மற்றும் பத்தாங் பாடாங் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் சீனப்பள்ளி கண்காணிப்பாளர் திருமதி.சாவ் வேய் திங் ஆகிய இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



மலேசியாவில் மிக நவினமான பள்ளியாகவும் 'எதிர்காலப் பள்ளி' (FUTURE SCHOOL) என்ற புகழைப் பெற்ற பள்ளியாகவும் திகழும் பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியின் கட்டட வசதிகள், சிறப்பு அறைகள், புதுமையான நூலகம், விரிவுரை மண்டபம், விளையாட்டு அரங்கம் மற்றும் பள்ளியின் அடைவுநிலை, வெற்றிகள், சாதனைகள் ஆகியவை பற்றி பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சாந்தி அச்சுதன் விளக்கம் கொடுத்தார்.

மதியுரை அறை

அறிவியல் அறை

கணினி அறை

வகுப்பறை

ஆசிரியர் அறை
நூலகம்

விரிவுரை மண்டபம்



யோகா வகுப்பு


மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நவினமயாகவும் கட்டப்பட்டிருக்கும் இப்பள்ளி வருகை புரிந்த அனைவரையும் மிகவும் ஈர்த்துவிட்டதாக பத்தாங் பாடாங் மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.பழனி சுப்பையா தமது நன்றியுரையில் தெரிவித்தார்.

இந்தப் பள்ளியில் பல புதுமைகளையும் நனிச்சிறந்த நடைமுறைகள் பற்றியும் நாம் நேரடியாகப் பார்த்து அறிந்ததை பேரா மாநிலத்திற்குக் கொண்டு சென்று நமது பள்ளிச் சூழலுக்கு ஏற்ற வகையில் செயல்படுத்துவதற்குப் பள்ளி நிருவாகிகள் தகுந்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமென பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.சுப.சற்குணன் தமது சிறப்புரையில் கேட்டுக்கொண்டார்.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை