JELAJAH PENDIDIKAN KPM 2019 - தமிழ்ப்பள்ளிகளுக்கான கோலப் போட்டி

மலேசியக் கல்வி அமைச்சின் கல்விச் சுற்றுச்செலவு விழா (JELAJAH PENDIDIKAN KPM) 2019 பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஈப்போ, மேப்ஸ் (MAPS, IPOH) வளாகத்தில்  நடைபெற்றது. அக்டோபர் 5 & 6 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், போட்டிகள் எனப் பல்வேறு சிறப்பு அங்கங்கள் இடம்பெற்றன.



அவற்றுள் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகத் தமிழ்ப்பள்ளிகளுக்கான ரங்கோலி கோலப் போட்டி கோலாகலமாக நடந்தது. பேரா மாநிலத்தின் 32 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 96 மாணவர்களும் 32 ஆசிரியர்களும் கோலப் போட்டியில் கலந்துகொண்டனர்.




மேலும், 50க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். போட்டிக்கான நீதிபதிகளாக முன்னாள் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டது நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.



அதோடு, பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.சுப.சற்குணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தேசிய சங்கத்தின் பேரா மாநிலத் தலைவர் திரு.ஆர்.பி.ஜெயகோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு போட்டியைச் சிறப்பாக வழிநடத்தினார்கள். ஆசிரியர் மகேந்திரனின் கனீரென்ற அறிவிப்பில் நிகழ்ச்சி வெகுச் சிறப்புடன் நிகழ்ந்தது.




ரங்கோலி கோலப் போட்டியின் வெற்றியாளர்கள் சிறப்புப் பரிசுகளைப் பெற்றனர். மொத்தம் 5 குழுக்கலுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசு - சங்காட் தமிழ்ப்பள்ளி, பத்து காஜா

இரண்டாம் பரிசு - அரசினர் தமிழ்ப்பள்ளி, ஈப்போ
மூன்றாம் பரிசு - சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிம்மோர்
நான்காம் பரிசு - பாத்தாக் ராபிட் தமிழ்ப்பள்ளி, பாகான் டத்தோ
ஐந்தாம் பரிசு - சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி
மலேசியாவை நேசிப்போம் எனும் கருப்பொருளில் ஒவ்வொரு குழுவினரும் கண்களைக் கவரும் வகையில் அழகழகாகவும் வகை வகையாகவும் கோலம் போட்டு வருகையாளர்களை அசத்தினர்.







மலேசியக் கல்வி அமைச்சும் பேரா மாநிலக் கல்வித் திணைக்களமும் ஏற்பாடு செய்த மலேசியக் கல்வி அமைச்சின் சுற்றுச்செலவு விழாவில் முதன் முறையாகக் கோலப் போட்டி நடைபெற்றது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய சிறப்பும் வரலாறும் ஆகுமென்றால் மிகையாகாது.









Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை