SJK(T) KERUH – தமிழ்ப்பள்ளிக்குத் தாய்லாந்து ஆசிரியர் சிறப்பு வருகை
மேல் பேரா மாவட்டம், பெங்காலான் ஊலு, குரோ தமிழ்ப்பள்ளிக்கு ஆசிரியர் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் தாய்லாந்து ஆசிரியர்
ஒருவர் அதிகாரப்படியாக வருகை புரிந்தார். மலேசிய நாட்டின் தேசிய ஆசிரியர் பணியாளர்
சங்கமும் தாய்லாந்து நாட்டின் ஆசிரியர் சம்மேளனமும் இணைந்து இந்த ஆசிரியர் பரிமாற்றுத்
திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.
குரோ தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் தாய்லாந்து ஆசிரியர் செல்வி பொன்சவான் கியாவ் |
குரோ தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.கி.செல்வராணி
அவர்களின் இசைவுடன் இப்பள்ளி ஆசிரியர் செல்வி.சீத்தாலட்சுமி பாலு மேற்பார்வையில் தாய்லாந்து
ஆசிரியர் செல்வி பொன்சவான் கியாவ் மலேசியாவில் தங்கி இருந்தார். இதே போல தாய்லாந்திலிருந்து 5 ஆசிரியர்கள் மலேசியா வந்திருந்தனர்.
தாய்லாந்து நாட்டில் உள்ள உத்தராதித் ராஜபாட் பல்கலைக்கழகப்
பள்ளியில் பணியாற்றும் ஆங்கில மொழி ஆசிரியரான செல்வி பொன்சவான் கியாவ் என்பவர்
4.10.2019 தொடங்கி 18.10.2019 வரையில் 14 நாட்கள் குரோ தமிழ்ப்பள்ளியில் ஒரு ஆசிரியராக
இருந்து பல்வேறு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
பண்பாட்டுப் பரிமாற்றம், கல்விச் சுற்றுலா, அடைவுக் குறியீட்டுப் பயணம், நாளும்
ஒரு கதை, நிபுணக் கற்றல் குழுமம் (PLC), ஆசிரியர் செல்வி பொன்சவான் கியாவுடன் நேர்க்காணல், தாய்லாந்தின் கிராத்தோங் விழாக் காட்சி, பிரியாவிடை எனப் பல நிகழ்ச்சிகளில் தாய்லாந்து ஆசிரியர் கலந்துகொண்டார்.
தலைமையாசிரியர் திருமதி.கி.செல்வராணி அவர்களுடன் |
தாய்லாந்து ஆசிரியருடன் பழகும் வாய்ப்பு பெற்றதும்
தாய்லாந்து நாட்டின் பண்பாட்டை அறிந்துகொண்டதும் குரோ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும் நல்லதொரு பட்டறிவாக அமைந்தது என்றால் மிகையாகாது.
இந்த ஆசிரியர் பரிமாற்றுத் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற
நன்மைகள்:-
1.தாய்லாந்து மாணவர்களிடம் குரோ தமிழ்ப்பள்ளியின்
வாசிப்புத் திட்டத்தைக் கொண்டு சென்று நடைமுறைபடுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2.தாய்லாந்து நாட்டு ஆங்கில மொழி
கற்பிக்கும் வழிமுறைகள் குரோ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்கப்பட்டது.
3.தாய்லாந்து நாட்டின் பண்பாட்டு விழா, விளையாட்டு, நடனம்
ஆகியவற்றைக் குரோ தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
4.தாய்லாந்து நாட்டின் கதைகளைக் கேட்டு மாணவர்கள்
மகிழ்வுற்றனர்.
5.தாய்லாந்து ஆசிரியரிடம் முழுமையாக ஆங்கிலத்தில்
பேசுவதற்கும் கலந்துரையாடுவதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
6.தாய்லாந்து ஆசிரியருடன் இணைந்து மனமகிழ் கற்றலில்
ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment