SJK(T) ST.THERESA’S CONVENT – இந்தோனீசியாவில் வெள்ளிப் பதக்கம் வாகை சூடி சாதனை
அக்டோபர் 23 முதல்
26 வரை இந்தோனீசியா, தங்கேராங் நகரத்தில் அனைத்துலக இளம் ஆய்வாளர் புத்தாக்கப் போட்டி
(INTERNATIONAL EXHIBITION FOR YOUNG INVENTORS 2019) நடந்தது. இதில் கலந்துகொண்ட பேரா, லாருட் மாத்தாங்
செலாமா மாவட்டம், செயின்ட் தெரெசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கம்
வென்று சாதனை படைத்துள்ளனர்.
செயின்ட் தெரெசா
கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்களாகிய தான்யாலட்சுமி விக்னேஸ்வரன், தமிழ்ச்செல்வன் கனகநாதன்
மற்றும் மித்ரா கணேசன் ஆகிய மூவரும் சேர்ந்து இந்தச் சாதனையைப் படைத்துத் தமிழ்ப்பள்ளிக்குப்
பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் திறன் வடிகால் முறையை உருவாக்கியதன் காரணமாக இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.
பள்ளியின் ஆசிரியர்கள்
லோகநாதன் பெருமாள் மற்றும் விசாலாட்சி அருணாசலம் ஆகிய இருவரும் மாணவர்களுடன்
இப்போட்டிக்குச் சென்றிருந்தனர்.
செயின்ட் தெரெசா
கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்த மாபெரும் அனைத்துலக வெற்றியும் சாதனையும்
அந்தப் பள்ளிக்கும், தலைமையாசிரியர் திருமதி.புவனேஸ்வரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள்
அனைவருக்கும் மிகச் சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
Comments
Post a Comment