SJK(T) LDG.BULUH AKAR - மாநில நிலை இணைப்பாட விருதளிப்பு விழாவில் முதல் பரிசு
பேரா, நடுபேரா மாவட்டம், பூலோ
ஆக்கார் தோட்டத் தமிழ்ப் பள்ளி இன்னொரு மகாத்தான சாதனை படைத்திருக்கிறது. பேரா மாநில நிலை இணைப்பாட விருதளிப்பு விழாவில் குறைந்த மாணவர்கள் பள்ளி பிரிவில்(149 மாணவர்களுக்கும் கீழ்) பூலோ
ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முதல் நிலை விருது வழங்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர் மனஹரன் மற்றும் ஆசிரியர் ஜெ.பிரபு |
பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குக் கேடயம், சான்றிதழ் மற்றும் 500 ரிக்கிட்டும் வழங்கப்பட்டது. 10.10.2019ஆம் நாள் நடைபெற்ற பேரா மாநில நிலை இணைப்பாட நன்மதிப்பு விருதளிப்பு விழாவில் மாநில தெபிங் திங்கி சட்ட மன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் அஜிஸ் பின் பாரி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர் திரு,பை.மனஹரன் விருதினைப் பெற்றுகொண்டார்.
SJK(T) Buluh Akar, Daerah Perak Tengah, Perak meraih Anugerah Johan Kecemerlangan Kokurikulum Peringkat Negeri Perak pada 10.10.2019 |
பேரா மாநிலத்தில் 852 தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
இதில் 427 பள்ளிகள் 150 மாணவர்களுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளாகும். இந்த
427 பள்ளிகளில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளியை வெற்றி பெற்ற பள்ளியாகத் தேர்வு குழுவினர் தேர்ந்தெடுத்தனர். இப்பிரிவு மலாய், சீனம் மற்றும் தமிழ் ஆகிய பள்ளிகளை உள்ளடங்கியதாகும். இவ்விருதளிப்பு விழாவில் விருது பெற்ற ஒரே தமிழ்ப்பள்ளி பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் |
கடந்த
சில ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகள் பெற்று வரும் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இதுவொரு மாபெரும் வெற்றியாகும். 24 மாணவர்களைக் கொண்டு வெற்றி நடைபோட்டுவரும் இப்பள்ளி கடந்தாண்டும் இதே பிரிவில் முதல் நிலையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment