SJK(T) KLEBANG - அறிவுத் திறன் போட்டியில் ஆயிரம் ரிங்கிட் பரிசை வென்றது
மலேசிய சிகரம் அமைப்பின் ஏற்பாட்டில் உதயம் அறிவுத் திறன் தேசிய நிலை போட்டி 12.10.2019ஆம் நாள் கோலாலம்பூர், புத்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பேரா மாநிலத்தைச் சேர்ந்த கிளேபாங் தமிழ்ப்பள்ளி, செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, தாப்பா தமிழ்ப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் இறுதிச் சுற்றில் களம் இறங்கின.
SJK(T) Klebang, Daerah Kinta Utara menang tempat Ke-5 dalam Pertandingan Kuiz Peringkat Kebangsaan |
தேசிய நிலையில் மொத்தம் 15 பள்ளிகள் கலந்துகொண்ட இறுதிப் போட்டியில் ஈப்போ, கிளேபாங் தமிழ்ப்பள்ளி 5ஆம் நிலையில் வெற்றிகண்டு நற்சான்றிதழ், கேடயம், மின் அகரமுதலி உள்பட ஆயிரம் ரிங்கிட்டையும் பரிசாகப் பெற்றது.
தைப்பிங், செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆறுதல் பரிசை வென்றனர்.
தாப்பா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் சுற்று வரையில் தேர்வாகி தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் முதல் பரிசினை சிரம்பான், கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாகை சூடினர். நாடு முழுவதும் 160 தமிழ்ப்பள்ளிகள் மாநில நிலையில் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் பேரா மாநிலத்தின் 3 தமிழ்ப்பள்ளிகள் தேசிய நிலைக்குத் தேர்வு பெற்றது பாராட்டுக்குரிய வெற்றி என்றால் அது மிகையாகாது.
Comments
Post a Comment