SJK(T) NATESA PILLAY - அனைத்துலக அறிவியல் போட்டியில் வெங்கலம் வென்று சாதனை

கீழ்ப்பேரா மாவட்டம், நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 4 பேர் கடந்த 24.10.2019 முதல் 27.10.2019ஆம் நாள் வரை இந்தோனீசியாவில் நடைபெற்ற கணிதம் மற்றும் அறிவியல் அனைத்துலக நிலை புதிர்ப் போட்டியில் கலந்துகொண்டனர். இவர்கள் மலேசிய நாட்டின் நிகராளிகளாக இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர்.

Murid-Murid SJK(T) Natesa Pillai Menang Pingat Gangsa Dalam Pertandingan Kuiz Sains Dan Matematik Peringkat Antarabangsa Di Bogor, Indonesia Pada 24 - 27 Oktober 2019

நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனுசியா அன்பழகன் மற்றும் திவினேஷ்வரன் சந்திரன் ஆகிய இருவர் வெங்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.




இவர்களோடு சேர்ந்து தீபராஜ் இளங்கோ மற்றும் விஜயராஜ் சந்திரசேகரன் ஆகிய இரண்டு மாணவர்களும் இப்போடியில் பங்கேற்றனர். நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகேஸ்வரி வீரன் மற்றும் பிரேம்குமார் கண்ணன் ஆகிய இருவரும் மாணவர்களுடன் சென்றிருந்தனர்.
அனைத்துலக நிலையில் வெங்கலப் பதக்கம் வென்றுள்ள நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்தச் சாதனை பள்ளிக்கும் தலைமையாசிரியர் திருமதி,குமுதா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிக்குரிய தீபாவளி பரிசாக அமைந்துள்ளது எனலாம்.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு