SJK(T) NATESA PILLAY – சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம் #3


நாட்டு மக்கள் குடும்ப மேம்பாட்டு வாரியம் [LEMBAGA PENDUDUK DAN PEMBANGUNAN KELUARGA NEGARA (LPPKN)] பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக PEKERTI SJK(T) எனப்படும் சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம் (PROGRAM PENDIDIKAN KESIHATAN REPRODUKTIF DAN SOSIAL) பயிலரங்கைக் கீழ்ப் பேரா மாவட்டம், நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளியில் நடத்தியது.

23.10.2019 புதன்கிழமை நடந்த இந்தப் பயிலரங்கத்திற்கு நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.குமுதா அவர்கள் தலைமை தாங்கினார். 

நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளி, சசக்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பிளாமிங்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, செலாபா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய 3 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். காலை மணி 10:00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பிற்பகல் மணி 1:15க்கு நிறைவடைந்தது.

சமூகச் சூழலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் பற்றி விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், பாலியல் பாதுகாப்பு பற்றியும் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கப்பட்டன. விளக்கவுரை மற்றும் குழு நடவடிக்கை முறையில் நடைபெற்ற இந்த பயிலரங்கம் மாணவர்களைக் கவரக்கூடிய வகையில் அமைந்தது. அதோடு, மிகவும் பயனாகவும் அமைந்தது.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை