BAGAN DATUK, HILIR PERAK மாவட்ட நிலை விளையாட்டு விழா

கடந்த 17.11.2019ஆம் நாள் ஞாயிறு காலை மணி 8:00 தொடங்கி பாகான் டத்தோ மாவட்டம், ஊத்தான் மெலிந்தாங், பாரதி தமிழ்ப்பள்ளித் திடலில் மாவட்ட நிலை விளையாட்டு விழா நடைபெற்றது. இது 10ஆவது ஆண்டாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பெற்ற இந்த விளையாட்டு விழாவில் ஐவர் காற்பந்து மற்றும் கைப்பந்து ஆகிய 2 போட்டிகள் நடந்தன. ஐவர் காற்பந்து போட்டியில் 16 குழுக்களும் கைப்பந்து போட்டியில் 9 குழுக்களும் கலந்துகொண்டன.
 
ஐவர் காற்பந்து போட்டி (ஆண்கள்) வெற்றியாளர்கள்:-

முதல் நிலை :- சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி
2ஆம் நிலை :- ஊலு பெர்னாம் தோட்டம் 2 தமிழ்ப்பள்ளி
3ஆம் நிலை :- நோவா ஸ்கோசியா தோட்டம் 1 தமிழ்ப்பள்ளி
4 ஆம் நிலை :- பாரதி தமிழ்ப்பள்ளி








கைப்பந்து போட்டி (பெண்கள்) வெற்றியாளர்கள்:-

முதல் நிலை :- பாரதி தமிழ்ப்பள்ளி
2ஆம் நிலை :- காமாட்சி தோட்டம் தமிழ்ப்பள்ளி
3ஆம் நிலை :- சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி
4 ஆம் நிலை :- செலாபா தமிழ்ப்பள்ளி






பாகான் டத்தோ, கீழ்ப்பேரா ஆகிய 2 மாவட்டங்களை உள்ளடக்கிய இவ்விளையாட்டு விழா தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களை விளையாட்டுத் துறையில் ஊக்கப்படுத்தி உருவாக்குவதற்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாகும். இவ்வாண்டில் ஏறக்குறைய 220 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறுவதாக ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த தலைமையாசிரியர் திருச்செல்வம் குறிப்பிட்டார்.

Comments

Post a Comment

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி