SJK(T) ST.MARY'S - திருமுறை விழா 2019 ஒட்டுமொத்த வெற்றியாளர்


பேரா, கிரியான் மாவட்டம், கோலக் குராவ் பட்டணத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் ஏற்பாட்டில் மாவட்ட நிலையில் திருமுறை விழா சிறப்புற நிகழ்ந்தது.




தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அவர்களின் பேரா மாநில சிறப்பு அதிகாரி திருவாளர்.நாகேஷ் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் உடன் கலந்துகொண்டார்.



ஆலயத் தலைவர் திரு.எஸ்.ஓ.அப்பன் அனைவரையும் வரவேற்றுப் பேசி ஆலயத்தின் பணிகளைப் பற்றி விவரித்தார். போட்டியில் கலந்துகொள்ள மாணவர்களை அனுப்பிவைத்த கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

செயிண்மேரி தமிழ்ப்பள்ளிக் குடும்பத்தினர்

செயிண்மேரி தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் சுழற்கிண்ணம் பெறுகிறார்

மாவட்ட நிலையில் நடைபெற்ற இந்தத் திருமுறை விழாவில் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளராகத் தேர்வு பெற்றது. அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.இரா.சுப்பிரமணியம் சுழற்கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டார்.





Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) KERUH - மின்னல் பண்பலையின் இளம் வடிவமைப்பாளர் திட்டம்

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்