SJK(T) LDG.SOON LEE - புதிய கருவள நடுவம் திறப்புவிழா

பேரா, கிரியான் மாவட்டம், சூன் லீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள கருவள நடுவம் திறப்புவிழா கண்டது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் சுப.சற்குணன் இந்தக் கருவள நடுவத்தை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.
 
Majlis Perasmian Pusat Sumber SJK(T) Ldg.Soon Lee telah disempurnakan oleh Sargunan Subramaniam, Pen.Pengarah SJK(T) pada 09.03.2020

 

தமது திறப்புரையில் பேசுகையில், தாம் பணியாற்றிய பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள கருவள நடுவத்தைத் திறந்து வைப்பதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டார். இந்த நூலகம் மிகவும் அழகாகவும் மாணவரின் கவனத்தை ஈர்ப்பதாகவும் உள்ளது. மாணவர்கள் விரும்பி வந்து வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வழிவகுக்கும். இன்றைய சூழலுக்கு ஏற்ப புத்தகங்களைத் தவிர்த்து கணினி வழியாக வாசிப்பதையும் பாடங்களைக் கற்பதையும் அதிகம் மாணவர்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப கணினி மூலை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. காலத்திற்கு ஏற்ப மாணவர்களைக் கல்வியின்பால் ஈர்க்கும் வகையில் இந்த நடுவத்தைச் சிறப்பாக உருவாக்கியுள்ள பொறுப்பாசிரியர் சனா காயத்திரிக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
 


 

பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் இரம்பையா, துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் மாணவர் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள், நூலகப் பொறுப்பாளர்கள் ஆகியோருக்குப் பொறுப்பாணையையும் சுப.சற்குணன் எடுத்து வழங்கினார். 





மேலும், பள்ளி நிலையிலான நிலையிலான நீலாம் வாசிப்புத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.






Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

18ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா (பேரா மாநில நிலை)

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்