தமிழ்க்கல்வி மாநாட்டுக் கட்டுரைப் படைப்பில் பேரா ஆசிரியர்கள் முதலிடம்
மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் தமிழ் அறவாரியம், தேசிய தமிழ்ப்பள்ளித்
தலைமையாசிரியர் மன்றம், மலாயா தமிழ் ஆசிரியர் சங்கம், தமிழ்ப்பள்ளி
முன்னாள் மாணவர் இயக்கம், மலேசிய இந்தியர் விண்வெளி அறிவார்ந்தோர் கழகம்
ஆகியோரின் கூட்டு ஏற்பாட்டில் மலேசியத் தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு,
17 நவம்பர் 2018 காரிக்கிழமை, மலாயாப் பல்கலைக்கழக வணிக கணக்கியல்
புலத்தில் காலை மணி 8:00 முதல் மாலை மணி 6:00 வரை நடைபெற்றது.
சுப.சற்குணன், சந்திரன் கோவிந்தன், மு.அர்ச்சுணன் |
இந்த மாநாட்டில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன், தலைமையாசிரியர் கழகத்தின் தேசியத் தலைவரும் பேரா மாநிலத் துணைத்தலைவருமாகிய மு.அர்ச்சுணன் ஆகிய இருவரும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் ஆய்வுக் கட்டுரை படைத்தனர். அவர்களுள் பேரா மாநில ஆசிரியர்களே முதலிடம் வகித்தனர்.
பேரா மாநிலத்தைச் சேர்ந்த மொத்தம் ஏழு ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் கட்டுரை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய காலமாகப் பேரா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களும்
ஆசிரியர்களும் பல்வேறு வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்ற
வரிசையில் இது மேலும் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. தேசிய நிலையில்
நடைபெறுகின்ற தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை வழங்கிய
பேரா மாநிலத் தமிழாசிரியர்களின் விவரங்களைக் கீழே காணலாம்.
1)கட்டுரையாளர் : சந்திரன் கோவிந்தன்
பள்ளி : சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி, கமுண்டிங்
தலைப்பு : தமிழ்க்கல்வி வளர்ச்சியில் மாணவர் இயக்கங்களின்
பங்களிப்பு
2)கட்டுரையாளர் : சிவபாலன் திருச்செல்வம்
பள்ளி : இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்
தலைப்பு : நான்காம் தொழில்புரட்சியில் தமிழ்க்கல்வி
3)கட்டுரையாளர் : மோனேஸ் நாச்சியா ரூபிணி தியாகராஜன்
பள்ளி : சுங்கை போகா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பாகான் செராய்
தலைப்பு : மெய்நிகர் கற்றலில் தமிழ்
4)கட்டுரையாளர் : தமிழ்மணி சின்னதம்பி
பள்ளி : ஊலு பெர்னாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
தலைப்பு : சுய கற்றலின்வழி முழு எண்களை ஓரிலக்க எண்ணால்
பெருக்குதல் திறனை மேம்படுத்துவதில் Dr.பெருக்கல் செயலியின் பயன்பாடு
5)கட்டுரையாளர் : குமாரி ஜெயந்திமாலா இராமசாமி
பள்ளி : திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, தெலுக் இந்தான்
தலைப்பு : தமிழ்க்கல்விவழி தமிழர் கலை, பண்பாடு, அடையாளம்
6)கட்டுரையாளர் : மேகவர்ணன் ஜெகதீசன்
பணியிடம் : தாப்பா ரோடு ஆசிரியர் செயற்பாட்டு நடுவம்
தலைப்பு : தாப்பா வட்டாரத் தமிழ்ப்பள்ளிகளிடையே மின்னியல்
கதைகூறும் திறனும் மெய்நிகர் கல்வி முறையும்
7)கட்டுரையாளர் : கோமளா அருணாசலம்
பள்ளி : மகா கணேசா வித்யாசாலை தமிழ்ப்பள்ளி, சித்தியவான்
தலைப்பு : தமிழ்க்கல்வி வளர்ச்சியில் மாணவர் இயக்கங்களின்
பங்களிப்பு
இதற்கிடையில், மாநாட்டுக் கருத்துரை அங்கத்தில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் பங்கேற்று, அண்மையில் பேரா, பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மற்றும் இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான இணையம் வழி தமிழ்க்கல்வித் தொடர்பு பற்றிய விளக்கங்களைப் பதிவுசெய்தார்.
Comments
Post a Comment