SJK(T) KLEBANG – STEM 2019 போட்டியில் முதல்நிலை வெற்றி
ஈப்போ எயோன் பேரங்காடியில்
பேரா மாநில நிலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM 2019) போட்டி
நடந்தது. 31.10.2019ஆம் நாளன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் வடகிந்தா மாவட்டம், ஈப்போ,
கிளேபாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல்நிலை பரிசினை வாகை சூடினார்கள்.
மலேசியக் கல்வி
அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பெற்ற இப்போட்டியில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த தேசியப்பள்ளி,
சீனப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கிளேபாங் தமிழ்ப்பள்ளி
மாணவர்கள் யோகதாஸ், சர்வின், திவேஷ் ராவ் ஆகிய மூவரும் இணைந்து நவின பற்பொறி ஓங்கியை
(KREN GERIGI MODEN) உருவாக்கி இந்தப் போட்டியில் பங்குபெற்றனர். இவர்களுக்குத் துணையாக
ஆசிரியர் பூர்ணிமா கிருஷ்ணசாமி உடன் சென்றிருந்தார்.
பேரா மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் அப்துல் அஜிஸ் பின் பாரி அவர்கள் வெற்றியாளர்களுக்குப்
பரிசுகளை எடுத்து வழங்கினார்.
கிளேபாங் தமிழ்ப்பள்ளிச்
சாதனை மாணவர்கள் மூவரும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17-20 வரை லங்காவியில் நடைபெறவுள்ள
தேசியநிலை போட்டிக்குச் செல்லவுள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு
முயற்சியின் பயனாக இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளதாகப் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.பத்மணி
தெரிவித்தார். மேலும், பள்ளிக்கு நற்பெயரை ஈட்டித்தந்துள்ள இவர்களுக்குத் தமது வாழ்த்துகளைத்
தெரிவித்தார்.
Comments
Post a Comment