SJK(T) KG.TUN SAMBANTHAN - சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம் #5

நாட்டு மக்கள் குடும்ப மேம்பாட்டு வாரியம் [LEMBAGA PENDUDUK DAN PEMBANGUNAN KELUARGA NEGARA (LPPKN)] பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக PEKERTI SJK(T) எனப்படும் சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம் (PROGRAM PENDIDIKAN KESIHATAN REPRODUKTIF DAN SOSIAL) பயிலரங்கை மஞ்சோங்  மாவட்டம், கம்போங் துன் சம்பந்தன்  தமிழ்ப்பள்ளியில் நடத்தியது.

07.11.2019 வியாழக்கிழமை நடந்த இந்தப் பயிலரங்கத்திற்குக் கம்போங் துன் சம்பந்தன்  தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.பரிமளா அவர்கள் தலைமை தாங்கினார். இந்தப் பயிலரங்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் குறிப்பாகப் புறநகர் மாணவர்களுக்கு மிகவும் பயன்மிக்கதாக அமைந்துள்ளது. நம் மாணவர்களுக்கு இந்தச் சமூக ஒழுக்கக் கல்வி மிகமிக அவசியம் எனத் தெரிவித்தார்.



கம்போங் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, சொகமானா தோட்டத் தமிழ்ப்பள்ளி, காஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கம்போங் கொலம்பியா தமிழ்ப்பள்ளி ஆகிய 4 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 52 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். காலை மணி 10:00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பிற்பகல் மணி 1:00க்கு நிறைவடைந்தது.


நாட்டு மக்கள் குடும்ப மேம்பாட்டு வாரிய  (LPPKN) பேரா மாநில உதவி இயக்குநர் லோகராணி மதிவாணன் மற்றும் அதிகாரி முகனேஸ்வரி சுப்பிரமணியம் ஆகிய இருவரும் சிறந்த முறையில் நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள். கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
சமூகச் சூழலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் பற்றி விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், பாலியல் பாதுகாப்பு பற்றியும் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கப்பட்டன. விளக்கவுரை மற்றும் குழு நடவடிக்கை முறையில் நடைபெற்ற இந்த பயிலரங்கம் மாணவர்களைக் கவரக்கூடிய வகையில் அமைந்தது. அதோடு, மிகவும் பயனாகவும் அமைந்தது.

சொகமானா தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியரும் மஞ்சோங் மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத் தலைவருமாகிய திரு.ஆறுமுகம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மேலும் சிறப்புக்குரிய ஒன்றாக அமைந்தது. அதேபோல, கம்போங் கொலம்பியா தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.புஷ்பராதா அவர்களும் உடன் கலந்துகொண்டார். 

Comments

Popular Posts:-

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

WEBINAR STPK / வலையரங்கம் #22 : தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #7 : மின்கற்றலில் உயர்நிலைச் சிந்தனைத் திறன்

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #6 : முரசு அஞ்சல் முத்து நெடுமாறன் கலந்துகொள்கிறார்

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #8 : மின்னியல் கூட்டம் & காணொலிக் கலந்துரையாடல்

WEBINAR / வலையரங்கம் #14 : தமிழ்க் கலைச்சொல் உருவாக்கக் கலையும் வழிமுறைகளும்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்