சந்திர பிம்பம் 2019 - தமிழ்ப்பள்ளிகளுக்கான பாரம்பரிய நடனப் போட்டி
தமிழ்ப்பள்ளிகளுக்கான பாரம்பரிய நடனப் போட்டியில் ஈப்போ, கிளேபாங் தமிழ்ப்பள்ளி முதல் பரிசைத் தட்டிச் சென்றது.
இரண்டாவதாக ஈப்போ, மகிழம்பூ தமிழ்ப்பள்ளியும், மூன்றாவது பரிசை பீடோர், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியும் வென்றன.
ஏழாவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியைத் தாஜ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சங்கம் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கிளேபாங் தமிழ்ப்பள்ளி |
மாநில நிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல குழுக்கள் பங்குப் பெற்றது. அதிலிருந்து இறுதி சுற்றில் பங்கேற்க 10 குழுக்கள் தேர்வுப் பெற்றன.
இப்போட்டியில் நான்காவது சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை, ஐந்தாவதாக ஈப்போ சென் பிலோமினா, ஆறாவதாக குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளி, ஏழாவது இடத்தை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி, எட்டாவது நிலையில் ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி, ஓன்பதாவது இடத்தை பத்துகாஜா சங்காட் தமிழ்ப்பள்ளியும், பத்தாவது இடத்தை ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளியும் தேர்வாகின என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழம்பூ தமிழ்ப்பள்ளி |
இந்தப் போட்டியைப் பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு அ. சிவநேசனின் நிகராளியாகக் கலந்துக்கொண்ட அவரின் சிறப்பு அதிகாரி முத்துசாமி தொடக்கி வைத்தார்.
ஆண்டு தோறும் இந்தப் போட்டி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு சார்பில் அதன் ஆலோசகர் கோபி நாயுடு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி |
இதில் வெற்றிப் பெற்ற முதல் குழுவுக்கு வெ.1250, இரண்டாவது குழுவுக்கு வெ.1000, மூன்றாவது குழுவுக்கு வெ.750, நான்காவது மற்றும் ஐந்தாவது குழுவுக்குத் தலா வெ.500 பரிசு தொகை வழங்கப்பட்டது.
Comments
Post a Comment