UPSR 2019 - பேரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பான தேர்ச்சி

2019ஆம் ஆண்டில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த அடைவுகளைப் பெற்று நமது பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் மிகச் சிறப்பான தேர்ச்சி அடைந்துள்ளோம். வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம் என்னும் முழக்கத்தை மெய்ப்பித்துக் காட்டியுள்ளோம்.

இவ்வாண்டில், 69.12% தேர்ச்சி பெற்று பேரா தமிழ்ப்பள்ளிகள் வரலாறு படைத்துள்ளோம். 2018ஐ விட 2.2% தேர்ச்சி விகிதம் உயர்வு கண்டுள்ளது. தேசிய பள்ளிகள் 70.54% தேர்ச்சியும் சீனப்பள்ளிகள் 69.15% தேர்ச்சியும் பெற்றுள்ளன. தமிழ்ப்பள்ளிகளில் மொத்தம் 37 மாணவர்கள் 8ஏ பெற்றுள்ளனர். அதிகமான மாணவர்கள் 7ஏ மற்றும் 6ஏ பெற்றுள்ளனர். பாட வாரியாக அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிநிலை சிறந்த அடைவைப் பதிவு செய்துள்ளோம். 
இவ்வாண்டின் யூபி எஸ் ஆர் முடிவுகள் மிக்க மகிழ்ச்சியைத் தரும் வகையில் உள்ளன. இந்தச் சிறப்பான அடைவுக்காக உழைத்து வெற்றி கண்டுள்ள நமது மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். 

இதற்காக அரும்பாடு பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெ.ஆ.சங்கத்தினர், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், பொது இயக்கங்கள், தனி நபர்கள், தமிழ்ப்பள்ளி ஆர்வலர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.. நன்றி..!

இந்தத் தருணத்தில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காகச் சிறந்த சேவைகளும் உதவிகளும் வழங்கிவரும் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு திருவாளர்.அ.சிவநேசன் அவர்களுக்கும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திருவாளர் வி.சிவக்குமார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம்.
 














Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

i-EIE 2019 புத்தாக்கப் போட்டியில் பேரா தமிழ்ப்பள்ளிகள் சாதனை

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்