SJK(T) LDG.BULUH AKAR - இணைப்பாட தேசிய நிலை விருது வென்று சாதனை

நடுபேரா மாவட்டம், பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தமது சாதனைகளின் வரிசையில் இன்னொரு மகாத்தான சாதனையைப் பதிவு செய்திருக்கிறது.

SJK(T) Ldg.Buluh Akar, Daerah Perak Tengah terpilih sebagai NAIB JOHAN dalam Majlis Anugerah Kecemerlangan Kokurikulum Peringkat Kebangsaan 2019 pada 14 November 2019

12 - 14 நவம்பர் 2019ஆம் நாள் ஈப்போவில் நடந்த தேசிய நிலை இணைப்பாட விருதளிப்பு விழாவில் (ANUGERAH KECEMERLANGAN KOKURIKULUM PERINGKAT KEBANGSAAN 2019) குறைந்த மாணவர்கள் பள்ளி பிரிவில்(149 மாணவர்களுக்கும் கீழ்) பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இரண்டாம் நிலை விருது வழங்கப்பட்டுள்ளது. 

3071 பள்ளிகள் கலந்து கொண்ட இப்பிரிவில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இரண்டாம் நிலை விருது கிடைத்தது பெருமைபட வேண்டிய செய்தியாகும். இதற்காக, பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குக் கேடயம், காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.


பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பை.மனஹரன் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.  இந்த மாபெரும் தேசிய நிலை சாதனைக்குப் பின்னணியில் இருந்து பாடுபட்ட பள்ளியின் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் பிரபு ஜெயசீலனும் உடன் கலந்துகொண்டார்.




மாநில தெபிங் திங்கி சட்ட மன்ற உறுப்பினரும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் அஜிஸ் பின் பாரி சிறப்புப் பெருமகராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். பேரா மாநிலக் கல்வி இயக்குநர் டாக்டர் முகமது சுகைமி பின் முகம்மது அலி விழாவில் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - மலாய் மேடை நாடகப் போட்டியில் ஆறுதல் பரிசு