SJK(T) LADANG CHEMOR - இடைநிலைப் பள்ளியை நோக்கி.. வழிகாட்டி நிகழ்ச்சி

2019 யூ.பி.எஸ்.ஆர். தேர்வை முடித்த சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி  மற்றும் சத்தியசீலா தோட்டத் தமிழ்ப்பள்ளிகளின் 6ஆம் ஆண்டு  மாணவர்கள் இன்னும் மூன்றாண்டுகளில்  பி.டி.3  தேர்விலும்  SPM தேர்விலும் தமிழ் மொழி பாடத்தை ஒரு தேர்வுப் பாடமாகக் கண்டிப்பாக எடுப்போம் என உறுதி மொழி வழங்கினர்.


“இடைநிலைப் பள்ளியை நோக்கி…” எனும்  கருத்தரங்கைச் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஏற்பாடு செய்திருந்தது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.கற்பகவள்ளி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஈப்போ குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகத்தின் செயலவை உறுப்பினர் நந்தகுமாரன்  சிறப்புப் பேச்சாளராக மாணவர்களிடம் உரையாற்றினார்.

இக்கருத்தரங்குகில் 2019 யூ.பி.எஸ்.ஆர். தேர்வை முடித்த சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்கள் 10 பேருடன் அருகில் உள்ள சத்தியசீலாத் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த 6 மாணவர்களும் உடன் கலந்து கொண்டனர்.


ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்து இடைநிலைப் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் நமது மாணவர்கள் தங்களை எப்படியெல்லாம் தயார் படுத்துக் கொள்ள வேண்டும், அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன, அதிலிருந்து விடுபட வழிகள் யாவை என பலதரபட்ட கருத்துகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்து இடைநிலைப் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் நமது மாணவர்கள் தமிழ் மொழியைக் கைவிடாமல் இருப்போம் என உறுதி மொழி அளித்ததோடு மட்டும் இல்லாமல் அந்த உறுதி மொழி அடங்கிய ஆவணம் ஒன்றிலும் தங்களின் சொந்த விருப்பத்தோடு கையொப்பமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஓர் உறுதி மொழி எடுக்கப்படும் பொழுது, முடிந்த வரையில் இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் தங்களின் தேர்வுப் பாடமாகத் தமிழ் மொழியை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகச் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.கற்பகவள்ளி தெரிவித்தார்.

தமிழ் மொழிக் கல்வியை இடைநிலைப் பள்ளி வரை தொடர்ந்து வந்தால் ஒரு மாணவர் என்னவெல்லாம் நன்மை அடைகிறார்; எப்படியெல்லாம் முன்னேறுகிறார்; எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் மலிந்து கிடக்கின்றன என்ற கருத்துக்களை நந்தகுமாரன் மாணவர்களிடம் வழங்கினார்.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

i-EIE 2019 புத்தாக்கப் போட்டியில் பேரா தமிழ்ப்பள்ளிகள் சாதனை

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்