தமிழால் நாம் நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளிக்கான போட்டிகள்


ஈப்போ, ஆதி சிவன் அன்பு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழால் நாம் எனும் நிகழ்ச்சி வெகுச் சிறப்புடன் கடந்த 9.10.2019ஆம் நாள் சனிக்கிழமை கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் நடந்தது.



வடகிந்தா மற்றும் தென்கிந்தா மாவட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் மாறுவேடப் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று இதில் நடைபெற்றது.

பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு.வ.சிவக்குமார் நிகழ்ச்சியில் சிறப்புப் பெருமகராகக் கலந்துகொண்டு திறப்புரை ஆற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.



அவர் தமது உரையில், தமிழ்ப்பள்ளிகள் தற்போது சிறப்பான கட்டட வசதிகளோடு அழகாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல வெற்றிகளையும் சாதனைகளையும் குவிப்பது மகிழ்ச்சியைத் தருவதாகப் பாராட்டினார். பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார். தமிழ் மாணவர்களுக்குத் தமிழ்ப்பள்ளியில் நிறைய வாய்ப்புகளும் கல்வி வசதிகளும் கிடைப்பதால் பெற்றோர்கள் இதனைச் செய்ய வேண்டும் என்றாரவர்.



பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் சிறப்புரை ஆற்றினார். போட்டி நடுவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்புச் செய்தார்.




ஆதிசிவன் அன்புச் சங்கத்தின் தலைவர் லிங்கம் தலைமையுரையாற்ற, செயலாளர் திருமதி.கார்த்திகா வரவேற்புரை ஆற்றினார்.


போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு  மாண்புமிகு வ.சிவக்குமார் பரிசுகளை எடுத்து வழங்கிச் சிறப்பித்தார்.

பேச்சுப் போட்டி வெற்றியாளர்கள்:-
முதல் பரிசு :- சதிஷ்வரன் முரளிதரன் – துரோனோ தமிழ்ப்பள்ளி
2ஆம் பரிசு :- கதிர்வேலன் கணேசன் –மகிழம்பூ தமிழ்ப்பள்ளி
3ஆம் பரிசு :- ரித்திக்ராஜ் சற்குணன் – சங்கீத சபா தமிழ்ப்பள்ளி



மாறுவேடப் போட்டி வெற்றியாளர்கள்:-

முதல் பரிசு :- ஸ்ரீ குகன் சிவராமன் – சங்காட் தமிழ்ப்பள்ளி
2ஆம் பரிசு :- கிஷாந்தினி இலட்சுமணன் – துரோனோ தமிழ்ப்பள்ளி
3ஆம் பரிசு :- ஐஸ்வர்யா சரவணக்குமார் – மகிழம்பூ தமிழ்ப்பள்ளி




இதே நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள், துணைத் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் சிறப்பு செய்யப்பட்டனர்.


மேலும் சங்காட் தமிழ்ப்பள்ளி சீரமைப்புப் பணிக்கான சிறப்புநிதியை மாண்புமிகு வ,சிவக்குமார் தலைமையாசிரியர் திருமதி. கற்பகவள்ளியிடம் வழங்கினார்.


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

i-EIE 2019 புத்தாக்கப் போட்டியில் பேரா தமிழ்ப்பள்ளிகள் சாதனை

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்