SJK(T) LDG.JENDERATA BHG 3 - தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று இரட்டைச் சாதனை
பேரா, பாகான் டத்தோ மாவட்டம், ஜென்றாட்டா பிரிவு 3 தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் அர்வினா சுப்பிரமணியம் தங்கப் பதக்கம் வென்ற வேளையில் அப்பள்ளியின் மாணவிகள் இருவர் வெள்ளிப் பதக்கம் வென்று இரட்டைச் சாதனை படைத்துள்ளனர்.
கெடா மாநிலம், சிந்தோக்கில் அமைந்துள்ள வடமலேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் மின்விளையாட்டு அனைத்துலக நிலைப் போட்டியில் (SINTOK INTERNATIONAL GAMES AND GAMIFICATION UUM) இவர்கள் கலந்துகொண்டு இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். இப்போட்டி கடந்த 05.11.2019ஆம் நாள் நடைபெற்றது.
வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் ஆண்டு நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த அனைத்துலகப் போட்டியில் மலேசியா, ஜப்பான், இந்தோனீசியா, தாய்லாந்து முதலான பல நாடுகளைச் சேர்ந்த 200 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் ஆண்டு நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த அனைத்துலகப் போட்டியில் மலேசியா, ஜப்பான், இந்தோனீசியா, தாய்லாந்து முதலான பல நாடுகளைச் சேர்ந்த 200 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆசிரியர் அர்வினா சுப்பிரமணியம் பொதுப் பிரிவில் ஈ-மேன் (E-MAN) எனும் விளையாட்டை அறிமுகப்படுத்தி தங்கப் பதக்கத்தை வாகை சூடினார்.
பள்ளியின் மாணவிகள் கீர்த்திகா சுப்பிரமணியம் மற்றும் லுமிதா சரவணன் ஆகிய இருவரும் மகிழ் ஊடாடல் விளையாட்டு தமிழ் மென்பொருளை அறிமுகப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டனர்.
Adik Keerthika dan Lumitha |
இவர்களின் இந்த இரட்டைச் சாதனை தமிழ்ப்பள்ளிகளின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் 21ஆம் நூற்றாண்டுக் கல்வி முறைக்கு ஏற்ப உருமாற்றம் கண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெள்ளிடை மலையாகக் கட்டுகின்றது என்றால் மிகையன்று,
Comments
Post a Comment