SJK(T) GOPENG - மழலையர் பள்ளி ஆசிரியர் நாகலட்சுமியின் புத்தாக்கம்

கடந்த 14.11.2019 வியாழக்கிழமை பேரா மாநில நிலை மழலையர் பள்ளி கருத்தரங்கமும் நனிச்சிறந்த நடைமுறை பகிர்வும் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கைப் பேரா மாநிலக் கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.



தென் கிந்தா மாவட்டம், கொப்பேங் தமிழ்ப்பள்ளியின் மழலையர் பள்ளி ஆசிரியர் திருமதி.நாகலட்சுமி இந்தக் கருத்தரங்கத்தில் தமது புத்தாக்கம் பற்றி படைப்பினை வழங்கினார். 



வாசிப்புப் பெட்டகம் (WORDS CANDY BOX) என்ற தம்முடைய புத்தாக்கத்திற்காக இவர், 2019இல் மாநில நிலையில் முதல் பரிசாகத் தங்கப் பதக்கமும், தேசிய நிலையில் மூன்றாம் பரிசும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய கல்வி இயக்குநர் டத்தோ டாக்டர் அமின் செனின் அவர்களிடம் தேசிய நிலை 3ஆம் பரிசு பெறுகிறார்

பேரா மாநிலக் கல்வித் துணை இயக்குநர் ஹஜி ரோஸ்லி பின் அகமாட் அவர்களுடன்

இந்த மாபெரும் வெற்றிக்கான தம்முடைய முயற்சிகள் மற்றும் வாசிப்புப் பெட்டகத்தின் புத்தாக்கம் பற்றி அவர் விளக்கிக் காட்டினார். மாநில நிலையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் தமது புத்தாக்கம் மற்றும் நனிச்சிறந்த நடைமுறை பற்றி படைப்பினை வழங்க தெரிவு செய்யப்பட்ட 3 ஆசிரியர்களுள், ஒரே தமிழ்ப்பள்ளி (மழலையர் பள்ளி)  ஆசிரியராகத் திருமதி.நாகலட்சுமி திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிப்புப் பெட்டகம் (WORD CANDY BOX)


தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடையே புத்தாக்க முயற்சிகளும் மாணவர்களுக்காகப் புதுமையான கற்றல் முறைகளை உருவாக்கும் முனைப்புகளும் பாராட்டும்படி முன்னேறி வருகின்றன என்பதற்கு ஆசிரியர் திருமதி.நாகலட்சுமி மிகச் சிறந்த முன்னுவமியாகத் திகழ்கிறார் என்றால் மிகையில்லை.


Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி