SJK(T) ST.THERESA'S CONVENT - மூலப்பெருந்தமிழ் அறிவுப்புதிர்ப் போட்டியில் முதல் பரிசு

16.11.2019ஆம் நாள் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தேசிய நிலை மூலப் பெருந்தமிழ் அறிவுப்புதிர்ப் போட்டி நடைபெற்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பெற்ற இப்போட்டியில் லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயின்ட் தெரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்று சாதனை படைத்தனர்.

3 orang murid SJK(T) ST.Theresa's Convent, Daerah Larut Matang dan Selama menjadi JOHAN dalam Pertandingan Kuiz Moola Perunthamil Peringkat Kebangsaan pada 16 Nov 2019 di Universiti Malaya.


தமிழ்மொழி வரலாறு, மரபு, சான்றோர், இலக்கியம் தொடர்பான அறிவுப்புதிர் கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்ட பயிற்றியை முழுமையாகக் கற்ற பிறகே மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.



அந்தவகையில் செயின்ட் தெரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்களான வி.தான்யாலட்சுமி, க.தமிழ்ச்செல்வன், வ.நிஷாந்திகா ஆகிய மூவரும் கலந்துகொண்டு முதல் நிலைப் பரிசினைத் தட்டிச் சென்றனர். இந்த வெற்றிக்காக இவர்களுக்கு ஆயிரம் வெள்ளி தொகை உள்பட வெற்றிக்கோப்பையும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர் திருமதி நாகநந்தினி ஆறுமுகம் இந்த மாணவர்களைப் போட்டிக்காகப் பயிற்றுவித்து அழைத்துச் சென்றார்.



முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் தேசிய நிலைப் போட்டியில் முதல் ஆண்டில் முதலாவது வெற்றியாளராக வாகை சூடிய செயின்ட் தெரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றால் மிகையில்லை.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - மலாய் மேடை நாடகப் போட்டியில் ஆறுதல் பரிசு