SJK(T) LADANG KAMATCHY - பேரா மாநில நிலை நீர் ஏவுகணை போட்டி 2019

கடந்த 10.11.2019 தேசிய வகை காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அறிவியல் கழக ஏற்பாட்டில் மாநில நிலையிலான நீர் ஏவுகணை போட்டியும் வான் குடை தரை இறங்கும் போட்டியும் [PERTANDINGAN ROKET AIR SJK(T) 2019] சிறப்பாக நடந்தேறியது. 
இப்போட்டி மாணவர்களிடையே அறிவியல் புத்தாக்கத்  திறன் வளர ஊக்குவிப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.  12 பள்ளிகளைச் சேர்ந்த 19 குழுக்கள் பங்குப்பெற்ற இப்போட்டி வான் குடை தரை இறங்குதல் மற்றும் நீர் ஏவுகணை ஏவுதல் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. 
நீர் ஏவுகணை ஏவும் போட்டியில் தேசிய வகை காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றனர். இரண்டாம் இடத்தைத் தேசிய வகை பிளமிங்டன் தமிழ்ப்பள்ளி கைப் பற்றியது. தொடர்ந்து வான் குடை தரை இறங்கும் போட்டியில் தேசிய வகை உலு பெர்ணம் தமிழ்ப்பள்ளி முதல் நிலையை அடைந்தது.  இரண்டாம் நிலையைத் தேசிய வகை அல்பா பெர்ணம் தமிழ்ப்பள்ளியும் மூன்றாம் நிலையினைத் தேசிய வகை குவாலா பெர்ணம் தமிழ்ப்பள்ளியும்  வாகை சூடின. 
ஒட்டுமொத்த வெற்றியாளருக்குச் சுழற்கிண்ணம்

இப்போட்டிகளின் ஒட்டுமொத்த வெற்றியாளராக மூன்று பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அவ்வெற்றியினை மீண்டும் தேசிய வகை காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி  தம் வசப்படுத்தியது. இரண்டாம் இடம் தேசிய வகை குவாலா பெர்ணம் தமிழ்ப்பள்ளியின் கை வசமானது. மேலும், மூன்றாம் நிலை தேசிய வகை காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கே உரியதாகியது. 
காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி


இறுதியில் தேசிய வகை காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளியே மாநில அளவிலான நீர் ஏவுகணை மற்றும் வான் குடை தரை இறங்கும் போட்டிக்கான அதிகப் புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டது. 2019 ஆண்டிற்கான மாநில அளவிலான நீர் ஏவுகணை சுழற்கிண்ணத்தை லெஸ்விதா த/பெ நந்தகுமார் மற்றும் பிரவினா த/பெ முனியாண்டி இணையினர் தட்டிச் சென்று தேசிய வகை காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
நீர் ஏவுகணை வெற்றியாளர்கள்

இதுபோன்ற ஒரு புதுமையான போட்டியை ஏற்பாடு செய்து நடத்தியதற்காகக் காமாட்சித் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிருவாகத்தையும் தலைமையாசிரியர் திருமதி.மு.ஜெயந்திமாலா, பொறுப்பாசிரியர்கள் சி.அன்பரசன், சு.அமுதா, ந.லோகேஸ்வரி, சு.கஸ்தூரி ஆகிய அனைவரையும் வெகுவாகப் பாராட்டலாம்.
  
வான்குடை தரையிறங்கும் வெற்றியாளர்கள்

Comments

Post a Comment

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு