SJK(T) LDG.CHANGKAT SALAK - சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம் #4

நாட்டு மக்கள் குடும்ப மேம்பாட்டு வாரியம் [LEMBAGA PENDUDUK DAN PEMBANGUNAN KELUARGA NEGARA (LPPKN)] பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக PEKERTI SJK(T) எனப்படும் சமூக ஒழுக்கம் மற்றும் பாலியல் பாதுகாப்பு நலக்கல்வித் திட்டம் (PROGRAM PENDIDIKAN KESIHATAN REPRODUKTIF DAN SOSIAL) பயிலரங்கைக் கோல  கங்சார்  மாவட்டம், சங்காட் சாலாக் தோட்டத்  தமிழ்ப்பள்ளியில் நடத்தியது.


06.11.2019 புதன்கிழமை நடந்த இந்தப் பயிலரங்கத்திற்குச் சங்காட் சாலாக்  தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.பொண்ணுமணி அவர்கள் தலைமை தாங்கினார். 

தலைமையாசிரியர் திருமதி.பொண்ணுமணி 

சங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளி, எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளி, எங்கோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய 4 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். காலை மணி 10:00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பிற்பகல் மணி 1:30க்கு நிறைவடைந்தது.




நாட்டு மக்கள் குடும்ப மேம்பாட்டு வாரிய  (LPPKN) பேரா மாநில உதவி இயக்குநர் லோகராணி மதிவாணன் மற்றும் அதிகாரி முகனேஸ்வரி சுப்பிரமணியம் ஆகிய இருவரும் சிறந்த முறையில் நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள். கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.






சமூகச் சூழலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் பற்றி விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், பாலியல் பாதுகாப்பு பற்றியும் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கப்பட்டன. விளக்கவுரை மற்றும் குழு நடவடிக்கை முறையில் நடைபெற்ற இந்த பயிலரங்கம் மாணவர்களைக் கவரக்கூடிய வகையில் அமைந்தது. அதோடு, மிகவும் பயனாகவும் அமைந்தது.







Comments

Popular Posts:-

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம்

SJK(T) LDG.SUNGAI BOGAK - Wordwall & Edpuzzle கூகிள் வகுப்பறையில் தமிழ்மொழிப் பயிற்சிகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்