SJK(T) ST.THERESA'S CONVENT - KLESF அனைத்துலகப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
நவம்பர் 01 முதல் 03 வரை கோலாலும்பூர்
அனைத்துலகப் பொறியியல் மற்றும் அறிவியல் போட்டி (KUALA LUMPUR INTERNATIONAL
ENGINEERING AND SCIENCE FAIR 2019) நடந்தது. இப்போட்டி துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில்
நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயின்ட் தெரெசா
கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
4 orang murid SJK(T) St.Theresa's Convent, Taiping, Daerah LMS menang Silver Award dalam Pertandingan KLESF 2019 di Universiti Tunku Abdul Rahman pada 13 - 03 November 2019 |
|
செயின்ட் தெரெசா கான்வண்ட்
தமிழ்ப்பள்ளி மாணவர்களாகிய தான்யாலட்சுமி விக்னேஸ்வரன், தமிழ்ச்செல்வன் கனகநாதன்
மற்றும் மித்ரா கணேசன், பிரவின்ராஜ் லோகநாதன் ஆகிய நால்வரும் சேர்ந்து இந்தச்
சாதனையைப் படைத்துத் தமிழ்ப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்கள் வெள்ள முன்னறிவிப்பு மற்றும்
திறன் வடிகால் முறையை உருவாக்கியதன் காரணமாக இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த
அனைத்துலக நிலைப் போட்டியில் மலேசியா உள்பட தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனீசியா
மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
பள்ளியின் ஆசிரியர்கள் லோகநாதன்
பெருமாள் மற்றும் முத்துராமன் முனியாண்டி ஆகிய இருவரும் மாணவர்களுடன்
இப்போட்டிக்குச் சென்றிருந்தனர்.
செயின்ட் தெரெசா கான்வண்ட்
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்த மாபெரும் அனைத்துலக வெற்றியும் சாதனையும் அந்தப்
பள்ளிக்கும், தலைமையாசிரியர் திருமதி.புவனேஸ்வரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள்
அனைவருக்கும் பெருமிதம் அளிப்பதாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
Comments
Post a Comment