SJK(T) SLIM RIVER - பளிதனப் பதக்கம் (PLATINUM AWARD) வென்று மகத்தான சாதனை

பேரா, பத்தாங் பாடங் மாவட்டம், தேசிய வகை சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி  மாணவர்கள் வடமலேசிய நிலை தொழில்நுட்பக் கண்காட்சி போட்டியில் முதல் இடத்தை வெற்றிகண்டு பளிதனம் (PLATINUM) பதக்கத்தை வாகை சூடினார்கள்.

SJK(T) Slim River menang Johan dan Pingat Platinum dalam Pertandingan ICT & Robotik Peringkat Kebangsaan (Zon Utara) pada 7 November 2019

7.11.2019ஆம் நாள் வியாழக்கிழமை வடமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் & எந்திரவியல் (NORTHEN REGION ICT & ROBOTIC COMPETITION 2019) போட்டி பினாங்கு பட்டர்வெர்த் நகரில்  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. 



இதில் 3 வகையான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவை, தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டி (ICT QUIZ), தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கண்காட்சி (ICT FAIR)  மற்றும் ரேரோ ரோபோட்டிக் போட்டி (RERO ROBOTIC COMPETITION). சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி  3 போட்டிகளிலும் பங்கெடுத்தது.


சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் க.பிரவின் குமார், இரா.தூயகணபதி மற்றும் ஜீ.குபேந்திரன் ஆகிய மூவரும் ஆசிரியர் திரு.சத்தீஸ் குமார் துணையுடன் 'OBJECT DETECTION' எனும் தலைப்பை ஒட்டி ஆய்வை மேற்கொண்டனர். இயந்திரம் எவ்வாறு ஒரு பொருளை அடையாளம் காண்கிறது என்பதையொட்டி இந்த ஆய்வு அமைந்திருந்தது.

சிறப்பான ஆய்வு மற்றும் படைப்பின் சிறப்பை அடிப்படையாகக் கொண்டு இவர்கள்  பளிதனப் பிரிவில் (PLATINUM CATEGORY) முதலாவது இடத்தை வாகை சூடினர்.  இம்மாபெரும் வெற்றியை மாணவர்கள், ஆசிரியர் திரு.சத்தீஸ் குமார், திரு.கெவின் ஆகியோர் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு முன்னோடி வெற்றியாகச் சமர்பித்தனர்.


இவ்வெற்றியைப் பற்றி கருத்துரைத்த பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பழனி சுப்பையா அவர்கள் இதுவொரு மகத்தான சாதனை என்றும் இப்பள்ளியின் அடுத்தடுத்த சாதனைகளுக்கான முதல்படி என்றும் தெரிவித்தார். இதற்காக அரும்பாடு பட்ட ஆசிரியர் சத்திஸ் குமார் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் மற்றும் சாதனை மாணவர்கள் மூவருக்கும் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.  

இதே போட்டியில் கலந்துகொண்ட வாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், சௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி தங்கப் பதக்கமும் பாகான் டத்தோ மாவட்டம், ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி வெங்கலப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.
சௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி

ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி

Comments

Post a Comment

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

SJK(TAMIL) ST.THERESA CONVENT - அறிவியல் விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்றது.

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

SJK(T) ARUMUGAM PILLAI - அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்