SJK(T) ARUMUGAM PILLAI - அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
பினாங்கு, அனைத்துலக
இளம் அறிவியலாளர் போட்டி (PENANG
INTERNATIONAL YOUNG SCIENTIST EXHIBITION) 2019 கடந்த 02 - 04.11.2019ஆம் நாள் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பேரா, கிரியான் மாவட்டம், ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
3 orang murid SJK(T) Arumugam Pillai, Alor Pongsu, Daerah Kerian, Perak menang Pingat Silver dalam Penang International Young Scientist Exhibition pada 2 - 4 November 2019 |
மொத்தமாக 83 குழுக்கள்
பங்கேற்ற இந்தப் போட்டிக்காக ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் காயத்திரி முனிஸ்வரன்,
மகிழ்நன் சுப்பிரமணியம், சந்தோஷ் கோபிநாதன் ஆகிய மூவரும் மகிழ் அறிவியல் விளையாட்டை
உருவாக்கி இருந்தனர். இப்பள்ளியின் ஆசிரியர்கள் பிரகலாதன் பாலகிருஷ்ணன் மற்றும் பவாணி
இராமசாமி ஆகிய இருவரும் மாணவர்களின் பயிற்றுநராக பணியாற்றினார்கள்.
குறைந்த மாணவர்
பள்ளியான ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி இதுபோன்ற அனைத்துலக நிலை போட்டியில் வெற்றி
பெற்றிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை
மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கம் செய்கிறார்கள் என்பதற்கு இதுவொரு நல்ல சான்றாகும்.
தலைமையாசிரியருடன் மாணவர்களும் ஆசிரியர்களும் |
போட்டியில் கலந்துகொண்ட
மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.சாந்தி
கணேசன் அவர்களும் உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment