SJK(T) MUKIM PUNDUT - தாய்லாந்து புத்தாக்கப் போட்டிக்காக மாணவர்கள் பயணம்

பாங்காக், தாய்லாந்து நாட்டில் நடைபெறும் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பேரா, மஞ்சோங் மாவட்டம், முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
3 orang murid dari SJK(T) Mukim Pundut berlepas ke Bangkok, Thailand untuk menyertai Pertandingan Thailand Inventors 2020 yang akan berlangsung 2 - 6 Februari.
இப்போட்டி  2 முதல் 6 பிப்ரவரி 2020 வரை நடைபெறவிருக்கின்றது. இப்போட்டிக்கு மூன்று மாணவர்கள் பள்ளி அளவில் தேர்வு செய்யப்பட்டு அனைத்துலகப் போட்டிக்குத் தயாராகினர். மூன்று மாணவர்களது பெயர்கள் கீழ்வருமாறு :-
1. சக்திவேல் கணேசன்
2. சுருதி ஸ்ரீ குமரன்
3. மொனிஷா தேவராஜூ

இந்த மூன்று மாணவர்களையும் பள்ளி அறிவியல் பாடக்குழு பயிற்றுவித்தது. ஆசிரியை திருவாட்டி கவிதா லெட்சுமணன் இம்மாணவர்களுக்குத் தகுந்த பயிற்சிகளை அவ்வப்போது வழங்கினார். இவர் பள்ளி அறிவியல் பாடக் குழுவின் தலைவர் ஆவார்.

இவருக்கு உறுதுணையாகத் துணைத் தலைமையாசிரியர்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். மற்ற ஆசிரியர்களும் இம்மாணவர்களுக்கும் ஆசிரியை திருவாட்டி கவிதா லெட்சுமணனுக்கும் பெரும் உதவிப் புரிந்தனர்.

இப்போட்டிக்கு முத்தாய்ப்பு வைத்தவர் பள்ளியின் தலைமையாசிரியர் மதிப்புமிகு திருவாளர் பாக்கியநாதன் பொன்னுசாமி ஆவார். இப்போட்டிக்குப் பொருளுதவி தேடுவதில் பெரும் பங்காற்றியவர். இப்பள்ளி மாணவர்களின்  அறிவுத் திறமை அனைத்துலக அளவில் மிளிர வேண்டும் என்று கனவு காண்பவர். அவரது கனவு கடந்தாண்டில் (2019) சுராபாயா, இந்தோனேசியாவில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் நிறைவேறியது. அதில் இப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.



இப்பொழுது அவரது கனவு மீண்டும் பூத்துள்ளது. இவ்வருடம் (2020) பாங்காக், தாய்லாந்தில் நடைபெறும் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டிக்கு மூன்று மாணவர்களை 1 பிப்ரவரி 2020 இல் வழி அனுப்பி வைத்துள்ளார். மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி எளிய முறையில் உற்சாகத்தோடு நடந்தது.


அவரது கனவும் ஆசிரியர்களின் உழைப்பும் போட்டியிடும் மாணவர்களின் தன்னம்பிக்கையும் வெற்றிபெற எல்லாம் வல்ல பரம்பொருள் அருள் புரிவாராக.

Comments

Popular Posts:-

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT : அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மாவட்ட நிலை சதுரங்கப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

IPITEx2020 BANGKOK - பேரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை

அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிச் சுற்றுக்கு மலேசியா (பேரா), இலங்கை மற்றும் டென்மார்க் தேர்வு