IPITEx2020 BANGKOK - பேரா ஆசிரியர்களின் புத்தாக்கத்திற்கு அனைத்துலக அங்கீகாரம்

பேரா மாநிலம், மஞ்சோங் மாவட்டத்தைச் சேர்ந்த பாவாணம் ஆசிரியர்  குழுவினர் உருவாக்கிய 'அருந்தகை வாசிப்புச் செயலி' [ARUNTHAGAI READING APPS] பாங்காக் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் 2 தங்கம் 1 வெண்கலப் பதக்கத்தை வென்றது.


இப்போட்டி (BANGKOK INTERNATIONAL INTELLECTUAL PROPERTY, INVENTION, INNOVATION AND TECHNOLOGY EXPOSITION - IPITEx2020) தாய்லாந்து, பாங்காக் மாநகரத்தில் 2 முதல் 6 பிப்ரவரி 2020 வரை நடைபெற்றது.  பாவாணம் ஆசிரியர் குழுவின் நிகராளிகளாக முனைவர் தனேசு மற்றும் ஆசிரியர் திரு.கலைச்செல்வன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு அருந்தகை வாசிப்புச் செயலியை அறிமுகம் செய்தனர்.





அருந்தகை வாசிப்புச் செயலி கண்காட்சிக்கு வருகைதந்த பலரின் கவனத்தை ஈர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இந்திய நாட்டு நிறுவனத்தின் [BE POSITIVE TRAINING ACADEMY] இயக்குநர் விமல் தியாகராஜன் இந்தச் செயலியைப் பார்த்து மிகவும் பாராடியதோடு பாராட்டு மடலும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.



தமிழ், மலாய், ஆங்கில மொழியில் வாசிப்பதற்கு உதவக்கூடிய இந்தச் செயலி போட்டிக்கு வந்திருந்த சில நாடுகளின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

#1 பிலிப்பைன்ஸ் நாட்டின் தங்கப் பதக்கம்
[PHILIPPINE GOLD AWARD FOR INVENTION]

#2 இந்தியா நாட்டின் தங்கப் பதக்கம்
[INDIA GOLD AWARD FOR INVENTION]

#3தாய்லாந்து நாட்டின் வெண்கலப் பதக்கம்
[BANGKOK BRONZE AWARD FOR INVENTION, INNOVATION AND TECHNOLOGY]

ஆகிய 3 விருதுகளை அருந்தகை செயலிக்காக இவர்கள் வென்று அனைத்துலக நிலையில் சாதனை படைத்துள்ளனர்.

இவர்களின் இந்த வெற்றியானது மலேசியத் தமிழ் ஆசிரியர்களுக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் உலகத் தரத்திலான புத்தாக்கங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இதுவொரு நல்ல சான்றாகும்.

தொடர்பான செய்தி:- 

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை