SJK(T) MAHATHMA GANDHI KALASALAI – மாநில நிலை ‘ஸ்குவாஷ்’ போட்டியில் இரட்டை வெற்றி
பேரா மாநில நிலை ‘ஸ்குவாஷ்’ [SKUASY] போட்டியில் பேரா, கோலா கங்சார்
மாவட்டம், மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் இருவர் இரட்டை வெற்றியை அடைந்து
பெருமை சேர்ந்த்துள்ளனர். இந்தப் போட்டியானது கடந்த 18.02.2020 செவ்வாய்க்கிழமை, சுங்காய், பெல்டாஜெயா மாரா இளம் அறிவியல் கல்லூரியில் [MRSM FELDAJAYA TROLAK, SUNGKAI] நடைபெற்றது.
இப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஹரித்ரா முதல்நிலை பரிசையும்
மாணவி கீர்த்தனா இரண்டாம் பரிசையும் வென்று சாதனை படைத்துள்ளனர். ஒரே பள்ளியைச் சேர்ந்த
இவர்கள் இருவரும் இறுதியாட்டத்தில் களம்கண்டு இந்த இரட்டை வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகவும் அரிதாக ஈடுபடும்
இவ்விளையாட்டில் இவ்விரு மாணவிகளும் மாநில நிலையில் இப்படியொரு சாதனை படைத்திருப்பது
பாராட்டுக்குரியது என்றால் மிகையில்லை.
Comments
Post a Comment