SJK(T) SAINT MARY'S - அனைத்துலக கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம்

இந்தியா, தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்துலக கராத்தே போட்டியில் பேரா, கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி மாணவன் கீர்த்தனன் குணாளன் மூன்றாம் இடத்தில் வெற்றிகண்டு வெண்கலப் பதக்கத்தை வாகை சூடினார்.

Adik Keerthanan Gunalan menang 2 Pingat Gangsa dalam Pertandingan Karate Peringkat Antarabangsa yang berlangsung di Tamilnadu, India pada 1&2 Februari 2020

கடந்த 01 மற்றும் 02.02.2020ஆகிய நாள்களில் தமிழ்நாடு, உடுமலை பேட்டையில் அனைத்துலக கராத்தே போட்டி (INTERNATIONAL OPEN KARATE CHAMPIONSHIP 2020) நடைபெற்றது.

இப்போட்டியில் சிறுவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் (Kata & Kumite Junior Single) கட்டா மற்றும் குமுதே ஆகிய இரண்டு போட்டிகளில் கீர்த்தனன் குணாளன் வெண்கலப் பதக்கத்தை வாகை சூடினார்.

இந்த அனைத்துலக வெற்றியின் மூலம்  கீர்த்தனன் குணாளன் தமது குடும்பத்திற்கும் பள்ளிக்கும் மட்டுமின்றி மலேசிய நாட்டிற்கே பெருமை சேர்ந்துள்ளார்.



இந்த வெற்றியைப் பற்றிக் கூறுகையில், செயிண்மேரி தமிழ்ப்பள்ளியின் புதிய எழுச்சிக்கும் உருமாற்றத்திற்கும் இந்த வெற்றி முதல் படியாகும். இவ்வாண்டில் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி பல புதிய பரிணாமங்களை எட்டிப் பிடிக்கப் போகிறது. அதற்கு இந்த வெற்றி எங்களுக்கு சிறந்த ஊக்கத்தை வழங்கியுள்ளது என்று செயிண்மேரி தமிழ்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை