அறிவியல் விழா 2020 - வடபேரா ஆசிரியர்களுக்கான பட்டறை
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழா இந்த ஆண்டிலும் தொடரவுள்ளது. இவ்வண்டிற்கான அறிவியல் விழா தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் பட்டறை 26.02.2020 புதன்கிழமை பிற்பகல் மணி 2:00 - 5:00 வரையில் நடைபெற்றது.
தைப்பிங், செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளியில் நடந்த இந்தப் பட்டறையில் வடபேரா வட்டாரத்தைச் சேர்ந்த மொத்தம் 52 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்டன.
அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க இயக்கத்தின் தலைவர் முனைவர் முகம்மது யூனூஸ் யாசின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் பட்டறையை வழிநடத்தினார்.
Comments
Post a Comment