SJK(T) DAERAH KERIAN - ஆசிரியர்களின் பொங்கல் விழா 2020
22.2.2020ஆம் நாள் சனிக்கிழமையன்று பேரா மாநிலம், கிரியான் மாவட்டத்தில் உள்ள 14 தமிழ்ப்பள்ளிகளும் ஒன்றிணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாரிட் புந்தார், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி வளாகத்தில் இவ்விழா நடைபெற்றது. தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் ஒன்றுசேர்ந்து கோலாகலமாகப் பொங்கல் விழாவினைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
![]() |
கிரியான் மாவட்டத் தலைமை ஆசிரியர்கள் / து.த.ஆசிரியர்கள் |
![]() |
செயிண்மேரி தமிழ்ப்பள்ளி |
கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருப்பதாக அதன் தலைவர் இரா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் சுப.சற்குணன் சிறப்பு வருகை மேற்கொண்டார். மாவட்டக் கல்வி அலுவலகத் துணை அதிகாரி சம்சுடின் அவர்களும் கலந்து சிறப்பித்தார். முன்னாள் தலைமையாசிரியர்கள் எஸ்.ஓ.அப்பன், மு.குப்புசாமி, கை.சந்திரசேகரன் மூவரும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தனர்.
![]() |
கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளி |
![]() |
களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி |
![]() |
யாம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி |
![]() |
கோலக் குராவ் தமிழ்ப்பள்ளி |
![]() |
ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி |
![]() |
பாகான் செராய் தமிழ்ப்பள்ளி |
![]() |
கிடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி |
![]() |
செலின்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி |
![]() |
சுங்கை போகா தோட்டத் தமிழ்ப்பள்ளி |
![]() |
சூன் லீ தோட்டத் தமிழ்ப்பள்ளி |
![]() |
ஜின் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி |
![]() |
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி |
![]() |
செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி |
கிரியான் மாவட்டத் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒற்றுமையும் பண்பாட்டு உணர்வும் மகிழ்ச்சியளிப்பதாக சுப.சற்குணன் தெரிவித்தார். தலைமை ஆசிரியர்களின் இந்த நல்ல முயற்சியைப் பாராட்டினார்.
![]() |
மாவட்டக் கல்வி உதவி அதிகாரி, முன்னாள் தலைமையாசிரியர்கள் |
ஏறக்குறைய 150 ஆசிரியர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் பொங்கல் வைத்தல், கோலப் போட்டி, உறி அடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்.
Comments
Post a Comment