SJK(T) LDG.BULUH AKAR - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டிக்காக பாங்காக் நோக்கிப் பயணம்
கடந்த 2017 மற்றும் 2019 ஆண்டுகளில் தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற்ற புத்தாக்க போட்டிகளில் பேரா, நடுபேரா மாவட்டம், பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி கலந்து கொண்டு பெருமை சேர்த்தது . அதேபோன்று இவ்வருடமும் (2020) பிப்ரவரி மாதம் 2 – 6 வரை போட்டிகள் பாங்காக்கில் நடைபெற இருக்கின்றன இவ்வருடமும் இப்போட்டியில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாணவி சிவதுர்கா மகேந்திரன் மற்றும் மாணவி சௌமியா நந்தகுமார் ஆகிய இருவரும் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஆசிரியை திருமதி அனுராதா முருகேசனும் உடன் செல்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாத காலமாக ஆசிரியர் திருமதி அனுராதா மற்றும் ஆசிரியை திருமதி நிர்மலா தேவி அவர்கள் மாணவர்களைப் பயிற்றுவித்தனர். 31.01.2020 இன்று காலை பூலோ ஆக்கார் தோட்ட பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இவர்களுக்கான சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மணி ஒரு பன்னிரண்டு போல் பாங்காக் செல்லும் மாணவர்களுக்கான வழி அனுப்பும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி குழுவினருக்கு பள்ளியின் தலைமையாசிரியர் திருவாளர் மனஹரன் அவர்கள் நம் நாட்டு தேசியக் கொடியைக் கொடுத்து அனுப்பினார் .இந்தப் போட்டியில் இவ்வருடமும் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றி வாகை சூடி வரும் என்று பெரிதும் எதிர் பார்ப்போம்.
நம் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு சிவநேசன் அவர்கள் இந்தப் பயணத்திற்கு நிதி உதவி அளிப்பாக கூறி உள்ளார். மாண்புமிகு குலசேகரன் அவர்கள் அறிவித்திருந்த இலவச விமானப் பயணச் சீட்டுகளைத் தமிழ் அறவாரியத்தின் உதவியுடன் பெற முடிந்தது. இவ்வேளையில் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் பங்களிப்பும் கெர்த்தே கோலா திரங்கானு பெட்ரோனாஸ் இந்திய பொறியியல் நிபுணர்களின் வற்றாத ஆதரவும் பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளியின் இந்தச் சாதனைக்குப் பெரும் உதவியாய் இருந்தது என்று பள்ளித் தலைமையாசிரியர் மனஹரன் தெரிவித்தார்.
Comments
Post a Comment