SJK(T) LDG.JENDERATA BHG.2 - மின்னியல் மேலாண்மை அணுகுமுறை அறிமுகம்


பேரா, பாகான் டத்தோ மாவட்டம், ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு தொடங்கி மின்னியல் மேலாண்மை அணுகுமுறை (e-Management) அறிமுகம் கண்டுள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருவாளர் சு.அறிவழகன் இதற்கு வித்திட்டுள்ளார்.

SJK(T) Ldg.Jenderata Bahagian 2 memperkenalkan sistem e-Pengurusan di sekolah untuk mengurangkan beban tugas guru

இந்த மின்னியல் மேலாண்மை அணுகுமுறையின் கீழ் பள்ளியின் பல்வேறு நிருவாகப் பணிகள் மரபுவழி முறையிலிருந்து மின்னியல் முறைமைக்கு மாற்றம் கண்டுள்ளன.

1-நாள் பாடக்குறிப்பு (e-RPH)

2.ஆண்டுத்திட்டம் (Rancangan Pelajaran Tahunan)

3. ஆசிரியர் பட்டறை (Bengkel Guru)

4.ஆசிரியர் வருகைப்பதிவு (Kehadiran Guru)

5.கடமையாசிரியர் பதிவு (Laporan Guru Bertugas)

6.இணைப்பாடப் பதிவு (Laporan Kokurikulum)

7.பள்ளிப் பேரணிக் குறிப்பு (Laporan Perhimpunan)

8.மாணவர் வருகை (Kehadiran Murid)
ஆகிய நிருவாகப் பணிகளை மிக இலகுவாக மின்னியல் முறையில் செய்வதற்குப் பள்ளித் தலைமையாசிரியர் வழியமைத்துக் கொடுத்துள்ளார்.



இதன்வழி இப்பள்ளி ஆசிரியர்களின் பணிச்சுமை குறைந்ததோடு மட்டுமல்லாது நிருவாகப் பணிகள் செவ்வனே நடைபெறுவதற்கு ஏதுவாக உள்ளது.


மின்னியல் மேலாண்மை அணுகுமுறையோடும் பள்ளி ஆசிரியர்களின் ஒன்றுபட்ட உழைப்போடும் ஜென்றாட்டா தோட்டப் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி வளர்ச்சியும் மேம்பாடும் காணும் என நம்புவதாக தலைமையாசிரியர் அறிவழகன் தெரிவித்தார்.

Comments

  1. நான்

    நன்று.வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) KERUH - மின்னல் பண்பலையின் இளம் வடிவமைப்பாளர் திட்டம்

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்