IPITEx2020 BANGKOK - பேரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை

கடந்த 2 - 6 பிப்ரவரி 2020, தாய்லாந்து பாங்காக் மாநகரத்தில் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டி 2020 (BANGKOK INTERNATIONAL INTELLECTUAL PROPERTY, INVENTION, INNOVATION AND TECHNOLOGY EXPOSITION - IPITEx2020) நடைபெற்றது.



பேரா மாநிலத்திலிருந்து 4 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு மகத்தான சாதனை படைத்துள்ளனர். மாணவர்களின் புத்தாக்கங்களுக்கு தாய்லாந்து, ஹாங்காங், இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் சிறப்பு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

#1. சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி 
[SJK(T) LDG.SUNGAI WANGI, DAERAH MANJUNG, PERAK

விருது :- தாய்லாந்து நாட்டின் 1 தங்கம், 1  வெள்ளி மற்றும் ஹாங்காங் நாட்டின் சிறப்புத் தங்கப் பதக்கம்

மாணவர்கள்:- 
குழு 1 - சர்வின், கவினேஷ், சிவபிரதாயினி, அவினாஷ், கீதன்

குழு 2 - வினோஜன், சஞ்சீவன், சர்வேஸ்வரி, ஷிவாணி, அழகேஸ்




#2. செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி
[SJK(T) ST.THERESA'S CONVENT, DAERAH LMS, PERAK]

விருது :- இந்தியா நாட்டின் 2 சிறப்புத் தங்கப் பதக்கம் மற்றும் தாய்லாந்து நாட்டின் 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம்

மாணவர்கள்:-
குழு 1 - தான்யாலட்சுமி விக்னேஸ்வரன், தமிழ்செல்வன் கனகநாதன், மித்ரா கணேசன்

குழு 2 - பிரவின் ராஜ் லோகநாதன், கவினாஸ்ரீ சங்கர், அவினேஷ் மனோகரன்




#3. முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி
[SJK(T) MUKIM PUNDUT, DAERAH MANJUNG, PERAK]

விருது:- பிலிப்பைன்ஸ் நாட்டின் 1 தங்கப் பதக்கம், இந்தியா நாட்டின் 1 தங்கம் மற்றும் தாய்லாந்து நாட்டின் 1 வெண்கலப் பதக்கம்

மாணவர்கள் :- சக்திவேல் கணேசன், சுருதி ஸ்ரீ குமரன், மொனிஷா தேவராஜூ





#4. பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
[SJK(T) BULUH AKAR, DAERAH PERAK TENGAH, PERAK

விருது :- தாய்லாந்து நாட்டின் 1 வெள்ளிப் பதக்கம்

மாணவர்கள் :- சிவதுர்கா மகேந்திரன் மற்றும் மாணவி சௌமியா  நந்தகுமார்




2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அனைத்துலக நிலையில் மாபெரும் சாதனை படைத்துள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும். இந்தச் சாதனை மாணவர்களைப் போட்டிக்காகப் பயிற்றுவித்து அவர்களுடன் சென்று ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், பெ.ஆ.சங்கத்தினர், பள்ளி மேலாளர் வாரியத்தினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும் சென்று சேரட்டும்.

"வெள்ளி மாநிலம்; வெற்றி மாநிலம்"


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்