SJK(T) LDG.SUNGAI BOGAK - Wordwall & Edpuzzle கூகிள் வகுப்பறையில் தமிழ்மொழிப் பயிற்சிகள்

பேரா, கிரியான் மாவட்டம், சுங்கை போகாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் மோனேஸ் ரூபிணி தியாகராஜன் ஆண்டு 1 மற்றும் ஆண்டு 2  தமிழ்மொழி மின்னியல் பயிற்சிகளை உருவாக்கி தமது கூகிள் வகுப்பறையில் [Google Classroom] வழங்கியுள்ளார்.


எட்படல் (edpuzzle) பயிற்றுராகத் தகுதி பெற்ற இவர் இந்தச் செயலியை மற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ஆண்டு 1 தமிழ்மொழிக் கலைத்திட்டத்தில் உள்ள அனைத்துத் திறன்களையும், ஆண்டு 2 தமிழ்மொழி கலைத்திட்டத்தின் இலக்கணத் திறன்களையும் அடிப்படையாகக் கொண்டு முழுமையான மின்னியல் பயிற்சிகளை உருவாக்கியுள்ளார். Wordwall & Edpuzzle ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி பயிற்சிகள் அனைத்தும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தம்முடைய கூகிள் வகுப்பறையில்  ஒருங்கிணைத்துள்ளார். 



தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆண்டு 1 மற்றும் ஆண்டு 2 மாணவர்கள் இந்தக் கூகிள் வகுப்பறையில் இணைந்து பயன்பெறலாம்.

ஆசிரியர் மோனேஸ் ரூபிணி தியாகராஜன் உருவாக்கியுள்ள கூகிள் வகுப்பறைக்கான கடவுச்சொல் பின்வருமாறு:-

ஆண்டு 1 :  nbvs3kt

ஆண்டு 2 :  pzdzs4m



Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]