SJK(T) PERAK SANGGETHA SABAH - 'சுடர் வானிலே' மாணவர் மின்னிதழ் வெளியீடு [காணொலி இணைப்பு]

வடகிந்தா மாவட்டம், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியில் மாணவர் மின்னிதழ் வெளியீடு கண்டுள்ளது. 

'சுடர் வானிலே' எனும் பெயரைக் கொண்ட இந்த மாணவர் மின்னிதழில் மாணவர்களின் படைப்புகளும் கைவண்ணங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாணவர்களின் படைப்புகள் அமைந்துள்ளன.

படத்தைச் சொடுக்கி மின்னிதழைக் காணவும்

இப்பள்ளியின் ஆசிரியர் இலாவண்யா மோகன்  பொறுப்பாசிரியராக இருந்து இந்த மின்னிதழை மிகச் சிறப்பான முறையில் வடிவமைப்புச் செய்துள்ளார். அவருடைய முயற்சியும் முனைப்பும் பாராட்டுக்க்குரியது.

பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சந்திரிகா அப்பு இவ்விதழில் வழங்கியுள்ள வாழ்த்துரையில், "மாணவர்கள் நலன்கருதி வெளியாகும் 'சுடர் வானிலே' அனைத்து மாணவர்களின் கைகளிலும் தவழ்ந்து, அவர்களின் திறமையை மேம்படுத்தும் பணியில் நிச்சயம் வெற்றிதனை ஈட்டித்தரும் என்கின்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு" எனத் தெரிவித்துள்ளார்.



மாணவர்களின் வாசிப்பிற்கும் எழுத்தாற்றல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும் வகையில் சுடர் வானிலே மின்னிதழை வெளியிட்டுள்ள பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளிக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்