மலாய் போட்டிகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெற்றிகள்
தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி மாணவர்கள்
கலந்துகொள்ளும் மலாய்மொழிப் போட்டிகள் மாவட்ட நிலையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
சில மகிழ்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
லாருட் மாத்தாங் செலாமா
மாவட்ட நிலையில் நடந்த மலாய்மொழிப் பேச்சுப் போட்டியில் (Pertandingan Syarahan Bahasa Malaysia) மாணவன் வினிஸ்வரன் முதல்நிலையில் வெற்றிபெற்றுள்ளார்.
இவர் தைப்பிங்கில் உள்ள செயிண்ட் தெரெசா தமிழ்ப்பள்ளி மாணவராவார்.
மாணவன் வினிஸ்வரன் |
வினிஸ்வரன் ஆசிரியர் மகேந்திரன் |
கிரியான் மாவட்ட நிலையில்
நடைபெற்ற மலாய்மொழிக் குறுக்கெழுத்துப் போட்டியில் (Pertandingan Teka Silang Kata) யாம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் இரா.முருகப்பிரியன் முதல் பரிசை வென்றார்.
தனிநபர் பிரிவில் இவர் இந்த வெற்றியை அடைந்துள்ளார். அதே வேளையில், குழுப்பிரிவில் இப்பள்ளியைச்
சேர்ந்த மாணவர்கள் அபிராமி, ருத்திரன். முருகப்பிரியன் ஆகியோர் மூன்றாவது பரிசினை
வென்றுள்ளார்கள்.
யாம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றியாளர்கள், ஆசிரியர்களுடன் தலைமையாசிரியர் கி.இராமன் |
பத்தாங் பாடாங், முவாலிம் மாவட்ட
நிலையில் நடந்த குறுக்கெழுத்துப் போட்டியில் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள்
மூவர் இரண்டாம் பரிசை வென்றனர். தூயகணபதி இராஜன், ஹர்சினி கிருஷ்ணாராவ், தர்ஷினி வடிவேலு
ஆகியோரே அந்த மூன்று மாணவர்களாவர்.
மலாய்மொழிப் போட்டிகளில்
மிகச் சிறப்பான வெற்றிகளை பதிவுசெய்யும் அளவுக்கு நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களைப் பயிற்றுவித்த
ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள். செயிண்ட் தெரெசா தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.கி.புவனேஸ்வரி, யாம் செங் தோட்டத்
தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திரு.கி.இராமன், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியின்
தலைமையாசிரியர் திரு.ஆ.முருகேசு ஆகியோருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
Comments
Post a Comment