SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை

பேராவில் செயின்ட் பிலோமினா கான்வன்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இருவர் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர். இப்பள்ளியின் மாணவிகளாகிய விசாலினி ஸ்ரீ, சுஜித்ரா ஸ்ரீ ஆகிய உடன்பிறந்த சகோதரிகளே இந்த மகத்தான சாதனையைச் செய்துள்ளனர்.


17.04.2018இல் கெடா, கூலிமில் நடைபெற்ற சிறிம் ஆக்கம், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி 2018இல் (SIRIM Invention, Innovation & Technology Expo) கலந்துகொண்ட இந்தச் சகோதரிகளின் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

செயலிழந்த கைக்கும் விரலுக்கும் அசைவுகள் கொடுத்துப் படிப்படியாக குணப்படுத்தும் புதுவகைக்  கருவி ஒன்றை  (Materials Application For Hand / Fingger Rehabilitation Theraphy) உருவாக்கியதற்காக இவ்விரு மாணவிகளுக்கும் இந்தத் தங்க விருது கிடைத்துள்ளது.

இந்த மாணவிகள் இருவரையும் தங்கப் பதக்க வெற்றியை நோக்கி வழிநடத்தியவர்கள் இருவர். ஒருவர் மணிப்பால் அனைத்துலகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர்.எஸ்.கிருஷ்ணன். மற்றொருவர், சுல்தான் இட்ரிஸ் ஷா சிகிச்சை அறவாறியத்தின் செயல்முறை அதிகாரி டத்தோ முனைவர் இராமநாதன். இவர்களின் தலைமையும் வழிகாட்டலும் இருந்ததால்தான் இந்த மாணவிகள் இத்தகையை மாபெரும் சாதனையைச் செய்துள்ளனர் என்றால் மிகையில்லை. இந்த இரண்டு சகோதரிகளும் முனைவர் எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவிகள் விசாலினி ஸ்ரீ, சுஜித்ரா ஸ்ரீ ஆகிய இருவருக்கும் தங்கப் பதக்கமும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டன.


இவர்களின் இந்தச் சாதனையானது ஒட்டுமொத்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இவர்களுடைய வெற்றியைப் பாராட்டும் வகையில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன், செயின்ட் பிலோமினா கான்வன்ட் தமிழ்ப்பள்ளிக்கு நேரடி வருகை மேற்கொண்டு மாணவிகளுக்கும், அவர்களின் தந்தையாருக்கும, பள்ளித் தலைமையாசிரியருக்கும் தமது பாராட்டினைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுப் பொருளையும் வழங்கினார்.

முனைவர் எஸ்.கிருஷ்ணன், தலைமையாசிரியர் திருமதி.சங்கரி, சுப.சற்குணன் ஆகியோரோடு சாதனைச் செல்வங்கள்

பேராவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடைந்துவரும் தொடர் வெற்றிகளில் இந்தச் சாதனையும் சிறப்பிடம் பெற்றுள்ளது எனலாம்.

Comments

  1. வாழ்த்துகள். படைத்த இறைவனுக்கு வணக்கம். பெற்ற தாய்தந்தையருக்கு வணக்கம். கற்ற தமிழுக்கு வணக்கம். என்னை நல்வழிப்படுத்தும் என் குருநாதர் திருவடிக்கு வணக்கம். திருச்சிற்றம்பலம். சாதனை என்பது உள்ளத்துள் தோன்றுவது. அந்த அளவிற்கு நமது ஆன்மாவில் பல அற்புதமான அற்புதங்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு மாணவருக்குள் இருக்கும் அந்த ஆற்றல்களை வெளிகொணர நல்லுள்ளங்கள் இருக்குமாயின் மாணவர்கள் இத்தகைய சாதனை படைப்பது வெள்ளிடை மலையாகும். வாழ்க. வளர்க. திருச்சிற்றம்பலம். சிவயநம வயநமசி யநமசிவ நமசிவய மசிவயந.

    ReplyDelete

Post a Comment

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி