SJK(TAMIL) TUN SAMBANTHAN - கடாரத்திலிருந்து அடைவுக் குறியீட்டுப் பயணம்

பேரா, பீடோர், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளிக்குக் கெடா மாநிலத்திலிருந்து ஆர்வட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அடைவுக் குறியீட்டுப் பயணம் (Lawatan Penanda Arasan) மேற்கொண்டு வந்தனர்.
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி நுழைவாயில்


துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி பேரா மாநிலத்திலேயே மிகச் சிறப்பான ஓர் உருமாற்றுப் பள்ளியாக (Sekolah Transformasi) விளங்குகின்றது. பேரா மாநிலத்தில் உள்ள பிறமொழி உருமாற்றுப் பள்ளிகளை விட துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி பல வகையிலும் சிறந்து விளங்கி முன்னணி வகிக்கின்றது. பேரா மாநிலத்தில் செயல்படும் மற்ற தமிழ்ப்பள்ளிகளும் கல்வி அதிகாரிகளும் ஆசிரியர் செயற்பாட்டு நடுவங்களும் இப்பள்ளிக்கு  வருகை மேற்கொண்டு பார்வையிடும் அளவுக்குத் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி முன்னுவமிப் பள்ளியாக (Sekolah Contoh) திகழ்ந்து வருகின்றது.

அந்த வகையில், கடந்த 6ஆம் திகதி ஏப்பிரல் 2018 வெள்ளிக்ககிழமை தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளிக்குக் கெடா மாநிலத்திலிருந்து தேசிய வகை ஆர்வட் 1 தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் காலை 10.00 மணி அளவில் வருகை புரிந்தனர்.

ஆர்வட் 1 தமிழ்ப்பள்ளிக் குடும்பத்தினர்


 
ஆர்வட் 1 தோட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. அம்மணியம்மாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.சரவணன் மற்றும் ஆசிரியர்கள் 15 பேரும் இந்த அடைவுக் குறியீட்டுப் பயணத்தில் கலந்துகொண்டனர்.
 
இவர்களை வரவேற்கும் வகையில் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மாணவர்களால் உருமாற்றுப் பள்ளி நடனம் படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உருமாற்று பள்ளியின் தலைமையாசிரியர் பழனி சுப்பையா அவர்களின் விளக்க உரை இடம்பெற்றது. பள்ளியின் ஆசிரியர்களும் உருமாற்று பள்ளியின் முக்கிய கூறுகளை உட்படுத்திய விளக்கங்களை வழங்கினர்.
 
ஆசிரியர்கள் குமாரி.சாந்தி (ஆண்டு 3 கபிலர்) மற்றும்  குமாரி.நந்தினி சூரியன் (பாலர்பள்ளி) ஆகியஇருவரும் 21 ஆம் நூற்றாண்டுக் கற்பித்தலைச் சிறப்புற அதன் நுணக்கங்களுடன் நடத்திக்காட்டினர். 

இறுதியாக உருமாற்றுப் பள்ளிச்  சிறப்பு அறையைச் சுற்றிப் பார்த்தனர். உருமாற்றுப் பள்ளியின் அமைப்பு, அதன் செயலாக்கம், பள்ளி அடைவுக் கூறுகள்,  உருமாற்றுத் திட்டம் தயாரிக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து பள்ளியின் தலைமையாசிரியரும் பிற ஆசிரியர்களும் விளக்கிக் கூறினார்கள்.

விளக்கமளிப்பு

அறிவார்ந்த பகிர்வு



இறுதியாக இரண்டு பள்ளிகளின் ஆசிரியர்களிடையே சிறிய கலந்துரையாடலும் அறிவார்ந்த பகிர்வும் நடைபெற்றது.

இந்தப் பயணத்தின் வழியாகத் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியும் மேம்பாடும் குறித்து கெடா மாநில ஆர்வட் 1 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் நிறையவே அறிந்துக்கொள்ள முடிந்தது. 

சுடர்விட்டு ஒளிவீசும் பேராவின் தமிழ்ப்பள்ளி ஒன்று கெடாவில் உள்ள தமிழ்ப்பள்ளிக்குத் தன்னுடைய வெற்றிக் கதையைப் பகிர்ந்துகொண்டதானது நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளிடையே நல்ல ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதையும் அறிவார்ந்த பகிர்வை நோக்கி தமிழ்ப்பள்ளிகள் முன்னேறுவதையும் காட்டுவதாக அமைந்துள்ளது.



உருமாற்று நடனம்

தலைமையாசிரியர்கள் திருமதி.அம்மணியம்மாள் - பழனி சுப்பையா

Comments

Popular Posts:-

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]