SJK(TAMIL) GERIK - ‘ஒரு குடும்பம் ஒரு புத்தாக்கம்’
கடந்த
30 மார்ச்சு 2018-ஆம்
பக்கலன்று பேரா, கிரிக்
தமிழ்ப்பள்ளியில் ‘ஒரு
குடும்பம் ஒரு
புத்தாக்கம் என்னும்
நிகழ்ச்சி இனிதே
நடந்தேறியது.
இந்நிகழ்ச்சி
கல்வி அமைச்சின்
முக்கியத் திட்டமான
பெற்றோர் நல்கைத்
திட்டத்தின் (Sarana Ibubapa) கீழ்
மிகச் சிறப்பான
முறையில் உருவாக்கம்
பெற்றிருந்தது. உலு
பேரா மாவட்டத்திலுள்ள
மூன்று தமிழ்ப்பள்ளிகளின்
பெற்றோர்களுடன் அவர்தம்
மாணவச் செல்வங்களையும்
இணைத்து இத்திட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது.
கிரிக் குழுவகப்
பள்ளியின் தலைமையாசிரியர்
திருமதி.வீ.இராஜம்பாள் தலைமையிலும்
பள்ளி ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி முற்றிலும் புதுமையான முறையில் நடந்த வருகையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் |
இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகக்
கிரிக் நாடாளுமன்ற
உறுப்பினர் டத்தோ
ஹஸ்புல்லா ஓஸ்மான்
அவர்கள் வருகையளித்ததோடு
பள்ளியின் கல்வி
மேம்பாட்டிற்காக ரி.ம.20,000.00 (இருபதாயிரம் வெள்ளி)
மானியம் வழங்குவதாக
அறிவித்தார்.
மேலும்,
தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்வுகளில் தொலைநோக்குச் சிந்தனைகளும் உருமாற்ற நடவடிக்கைகளும் அதிகம் இடம்பெற்றுள்ளதை ‘ஒரு
குடும்பம் ஒரு
புத்தாக்கம்’ என்னும்
இத்திட்டம் புலமைப்படுத்துவதைத்
தாம் உணர்ந்து
பெருமிதம் கொள்வதாகக்
கூறினார்.
21-நூற்றாண்டுக்
கல்வியைப் பறைசாற்றும்
வகையிலும் குடும்பங்களில்
அறிவியல் சிந்தனைகள் வேரூன்ற
இது
ஒரு நற்சிந்தனைத்
திட்டமாக அமையப்பெறும்
என்பதை இக்குழுவகப்
பள்ளி உறுதிபடுத்தியுள்ளது.
பெற்றோரின் உதவியோடு மாணவர்கள் புத்தக்கங்களில் ஈடுபடுவதற்கு இந்தத் திட்டம் வழிகாட்டியுள்ளது. மேலும், மாணவர்களிடம் ஏற்படும் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுத்து மாணவர்களை வெற்றியாளராக உருவாக்குவதற்கு இந்தத் திட்டம் உதவியுள்ளது எனலாம்.
மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் இணைந்து குடும்பத்தில் உருவாக்கிய புத்தாக்கங்களை இந்த நிகழ்ச்சியில் கண்காட்சிக்கு வைத்து வருகையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். மாணவர்களின் ஆற்றலும் பெற்றோரின் ஒத்துழைப்பும் ஒன்றிணைந்தால் பல்வேறு புத்தாக்கங்களை உருவாக்க முடியும் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது.
மிகவும் புதுமையான முறையில் 'ஒரு குடும்பம் ஒரு புத்தாக்கம்' எனும் இந்த நிகழ்ச்சியை வெகுச் சிறப்பாக நடத்திய கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளிக் குடும்பத்தினர் பாராட்டுக்குரியவர்கள் என்றால் மிகையாகாது.
Comments
Post a Comment