கல்விப் பெருவுலாவில் ஆசிரியர்களின் நடனம் (காணொலி)

மலேசியக் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதன்முறையாகத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பண்பாட்டு நடனம் வழங்கி அசத்தினார்கள். பேரா மாநிலத்தில் உள்ள கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களின் இந்தப் பண்பாட்டு நடனம் சிறப்பாக அமைந்திருந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களை மட்டுமின்றி கல்வித்துறை அதிகாரிகளையும் முகநூல் நண்பர்களையும் ஆசிரியர்களின் இந்தப் படைப்பு வெகுவாகக் கவர்ந்துள்ளது.


 மலேசியக் கல்வி அமைச்சு கடந்த மார்ச்சு 31 முதல் ஏப்ரல் 1 வரையில் பேரா, பாரிட் புந்தாரில் உள்ள மைடின் பேரங்காடியில் கல்விப் பெருவுலா 2018 நிகழ்ச்சியை நடத்தியது.

மலேசியக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மாட்சீர் காலிட் இந்த நிகழ்ச்சியை அதிகாரப்படியாகத் தொடக்கி வைத்தார். பேரா மாநிலக் கல்வி இயக்குநர் மதிப்புமிகு மாட் லாசிம் பின் இட்ரிஸ் இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.


கல்விக் கண்காட்சி, விளையாட்டு, மனமகிழ் நிகழ்ச்சிகள், போட்டிகள் எனப் பல்வேறு அங்கங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் பண்பாட்டு நடனமும் இடம்பெற்றது.

வகுப்பறையில் மட்டுமே தங்கள் கற்பித்தல் திறனைக் காட்டிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் மேடைக்கு வந்து பண்பாட்டு நடனம் வழங்கி அசத்தியது எல்லாருடைய கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், பேரா மாநிலக் கல்வி இயக்குனர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் படைப்புக்காகத் தமது பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
  

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்