கடந்த 25.08.2019 (ஞாயிறு) பேரா மாநில நிலை எந்திரவியல் புத்தாக்கப் போட்டி (PERTANDINGAN ROBOTICS PERINGKAT NEGERI PERAK) ஈப்போவில் நடைபெற்றது. மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் சஸ்பாடி நிறுவனம் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டியில் பேரா, தஞ்சோங் ரம்புத்தான், சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி கலந்துகொண்டு வெங்கலக் கேடயமும் (STATE LEVEL BRONZE AWARD) சிறந்த படைப்பாளர் விருதையும் (STATE LEVEL OPEN CATEGORY BEST PRESENTATION AWARD) வென்றது. இந்தப் போட்டியில் 8 பள்ளிகள் கலந்துகொண்ட வேளையில், பேரா மாநில நிலையில் கலந்துகொண்ட ஒரே தமிழ்ப்பள்ளி, சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கெடுத்த மாணவர்கள் கீர்த்தனா குணசேகரன் (ஆண்டு 6), நிஷாந்தன் தியாகராஜன் (ஆண்டு 6), நிறைமதியன் முரளிதரன் (ஆண்டு 5) ஆகியோர் இந்த வெற்றிக்கு உரியவர்கள். இப்பள்ளி ஆசிரியர்கள் திரு.சிவம், திருமதி.புனிதா, திருமதி.ஜீவா, சிறப்புப் பயிற்றுநர் திரு.ஆனந்த் மற்றும் திரு.கோமளன் ஆகியோர் மாணவர்களைச் சிறப்...
Comments
Post a Comment