செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு


22.04.2018 ஞாயிற்றுக்கிழமை கடாரத்திலுள்ள எயிம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தேசிய நிலை செந்தமிழ் விழா போட்டியில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். மலேசியக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இந்தத் தேசிய நிலையிலான போட்டியில் மொத்தம் 10 மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழ்மொழி சார்ந்த மொத்தம் 13 போட்டிகளில் இந்தச் செந்தமிழ் விழாவில் இடம்பெற்றுள்ளன. தமிழ்ப்பள்ளி, தேசியப் பள்ளி, இடைநிலைப் பள்ளி, படிவம் 6 என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மாநில நிலையில் முதலாம், இரண்டாம் நிலையில் வெற்றிபெற்ற மாணவர்கள் இப்பொழுது தேசிய நிலையில் தங்கள் தமிழ்மொழித் திறனையும் ஆற்றலையும் வெளிபடுத்தவுள்ளனர்.

பேரா மாநிலத்தின் நிகராளிகளாக 30 மாணவர்கள் கலந்துகொள்ளும் வேளையில் அவர்களோடு மாநிலக் கல்வித் திணைக்களத்தின் சார்பில் 2 உயர் அதிகாரிகளும் 6 ஆசிரியர்களும் கலந்துகொள்வார்கள்.

தேசிய நிலை செந்தமிழ் விழாவில் கலந்துகொள்ளும் பேரா மாநிலப் போட்டியாளர்களின் விவரங்கள் பின்வருமாறு:-

*தமிழ்ப்பள்ளிகளுக்கான போட்டிகள்

1.கதை சொல்லும் போட்டி (படிநிலை 1)

-இளவதனன் சங்கர் (SJKT Ldg.Sin Wah, Kamunting)
-சஹானா செந்திலாதிபன் (SJKT Ldg.Getah, Taiping)

2.திருக்குறள் மனனப் போட்டி (படிநிலை 1)
-சுபாஷ் ராஜ் குணாளன் (SJKT Perak River Valley, K.Kangsar)
-நிரஞ்சனா கணேசன் (SJKT Kamunting)

3.கட்டுரைப் போட்டி (படிநிலை 2)
-இளஞ்செழியன் சற்குணன் (SJKT Bagan Serai)
-பிரியசக்தி துரைசாமி (SJKT Tapah)

4.பேச்சுப் போட்டி (படிநிலை 2)
-திஹாலினி செந்திலாதிபன் (SJKT Ldg.Getah, Taiping)
-திவ்யா நடராஜா (SJKT Slim Village, Slim River)

5.கவிதை ஒப்புவித்தல் போட்டி (படிநிலை 2)
-கீர்த்திகா கந்தன் (SJKT Perak River Valley, K.Kangsar)
-தர்ஷினி பிரியா ராமலு (SJKT Trolak)


*தேசியப் பள்ளிகளுக்கான போட்டிகள்

6.கதை சொல்லும் போட்டி (படிநிலை 1)
-பூர்த்திகா முகந்தரன் (SK Gopeng)
-மிரேலா எண் ரோபர்ட் தாஸ் (SK Klian Pauh, Taiping)


7.குழுப்பாடல் போட்டி (படிநிலை 2)
-கோகுலன் தனபாலன், ஜேசன் நியோல் ராஜ், நதேனியல் அபிஷேக், அண்டிரியன் செல்வராஜ் (SK Methodist ACS, Ipoh)

*இடைநிலைப்பள்ளிகளுக்கான போட்டிகள்

8.கவிதை ஒப்புவித்தல் போட்டி (கீழ் இடைநிலை)
-குகனேஸ்வரன் சக்திவேல் (SMK Horley Methodist, Teluk Intan)
-நித்தியா ஸ்ரீ புருசோத்தமன் (SMK Convent, Taiping)

9.பேச்சுப் போட்டி (கீழ் இடைநிலை)
-அகிலன் தவக்குமார் (SMK Horley Methodist, Teluk Intan)
-யுவனேஷ் தியாகராஜன் (SMK Bernadattes Convent, Batu Gajah)

10.சிறுகதைப் போட்டி (மேல் இடைநிலை)
-ஸ்ரீ சிவசாலினி ஆனந்தன் (SMK Methodist, Ayer Tawar)
-பூவரசி வெங்கிடாசலம் (SMK Kg.Jambu, Taiping)

11.இளையோர் கருத்தாடல் (மேல் இடைநிலை)
-கார்த்திக் பிரகாஷ், அரிஷ்வேந்திரன் ஜீவரத்தினம், நோரின் எண் வில்சன், கமலேஸ்வரி குணாளன் (SMK Dato’Zulkifli Muhammad, Slim River)

*படிவம் 6க்கான போட்டிகள்

12.மேடைப் பேச்சுப் போட்டி
-திவ்யதர்ஷினி கண்ணன் (Kolej Tingkatan 6, Seri Ipoh, Ipoh)
-டாசினி இந்திராபத்மா (Kolej Tingkatan 6, Seri Ipoh, Ipoh)

13.கட்டுரைப் போட்டி
-திவ்யதர்ஷினி யோகேஸ்வரன் (SMK Horley Methodist, Teluk Intan)
-நந்தினி மணியரசன் (SMK Tok Muda Abdul Aziz, Sg.Siput)

பேரா மாநிலக் குழுவின் தலைவராக உதவி இயக்குநர் ந.சந்திரசேகரன் மற்றும் துணைத் தலைவராக தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் ஆகியோரின் தலைமையிலும் கோவி.சந்திரன், சபா.கணேசு, கு.அந்தோணிசாமி, வீ.மோகன் குமார், திருமதி.சுமதி, திருமதி. யமுனாதேவி, செல்வி.சு.கௌரி ஆகிய ஆசிரியர்களின் பொறுப்பிலும் தேசிய செந்தமிழ் விழா 2018 போட்டியில் கலந்து கொள்ளும் பேரா மாநிலக் குழுவினர் வெற்றி பெறுவதற்கு மனதார வாழ்த்துவோம்.

#வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம்

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

SJK(T) ARUMUGAM PILLAI - அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

SJK(TAMIL) ST.THERESA CONVENT - அறிவியல் விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்றது.

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்