SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - மலாய் மேடை நாடகப் போட்டியில் ஆறுதல் பரிசு
தேசிய நிலையில் நடைபெற்ற
மலாய் மேடை நாடகப் போட்டியில் கலந்துகொண்டு சுங்கை சிப்புட், மகாத்மா காந்தி கலாசாலைதமிழ்ப்பள்ளி ஆறுதல் பரிசு பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இப்பள்ளிக்கு RM1000.00 (ஆயிரம் வெள்ளி) பரிசாகக் கிடைத்தது.
மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் |
கடந்த 21.4.2018 சனிக்கிழமை
கோலாலம்பூர் கலை மண்டபத்தில் (Kompleks
Budaya Kuala Lumpur) பரிசளிப்பு விழா நடந்தது. நாடு தழுவிய அளவில் இப்போட்டியில் கலந்துகொண்ட தமிழ்ப்பள்ளிகளின்
மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.சாந்தகுமாரி, ஆசிரியர்கள் சுரேன் ராவ், காளிதாஸ், திருமதி அஸிசா பேகன், திருமதி.கஸ்தூரி, திருமதி.தேன்மொழி, திருமதி.கவிதா, செல்வி சங்கீதா ஆகியோர் இந்தப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.சாந்தகுமாரி, ஆசிரியர்கள் சுரேன் ராவ், காளிதாஸ், திருமதி அஸிசா பேகன், திருமதி.கஸ்தூரி, திருமதி.தேன்மொழி, திருமதி.கவிதா, செல்வி சங்கீதா ஆகியோர் இந்தப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே
மேடை நாடகத் திறனை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் மலேசிய மேடை நாடகக் கலைஞர் எஸ்.டி.பாலா
மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் இந்த மலாய் நாடகப் போட்டியை நடத்தி வருகின்றார்.
மாநில நிலையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டு பின்னர் தேசிய நிலையில் பரிசளிப்பு நிகழ்ச்சி
நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இவ்வாண்டில்
மொத்தம் 8 தமிழ்ப்பள்ளிகள் தேசிய நிலையில் பரிசுகளை வென்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:-
முதல் பரிசு : ரினி
தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
இரண்டாம் பரிசு :
காஜாங் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
மூன்றாம் பரிசு :
ரிங்லெட் தமிழ்ப்பள்ளி, பகாங்
ஆறுதல் பரிசு :
மகாத்மா காந்தி கலாசாலை
தமிழ்ப்பள்ளி, பேரா
கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
தாமான் மெலாத்தி தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
லோபாக் தமிழ்ப்பள்ளி.
நெகிரி செம்பிலான்
நடுவர் குழுவின் சிறப்புப்
பரிசு:
பாசிர் காஜா தமிழ்ப்பள்ளி, கிளந்தான்
சிறந்த நாடக நடிகன்:
காஜாங் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
சிறந்த நாடக நடிகை:
தாமான் மெலாவாதி தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
முத்தமிழின் ஒரு கூறாகிய
நாடகத் துறையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமையையும் அதே வேளையில் மலாய்மொழி ஆற்றலையும்
வளர்க்கும் இந்த மேடை நாடகப் போட்டியைச் சிறப்பாக நடத்திவரும் கலைஞர் எஸ்.டி.பாலா பாராட்டுதலுக்கு
உரியவர் என்றால் மிகையில்லை. அதேபோல், இந்த நாடகப் போட்டியில் கலந்துகொள்ளும் தமிழ்ப்பள்ளி
மாணவர்களும் ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
ஆறுதல் பரிசை வென்று பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ள மகாத்மா காந்தி கலாசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
Comments
Post a Comment