SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி
கடந்த 25.04.2018இல், பிற்பகல் 2.00 மணிக்கு, கீழ்ப்பேரா மாவட்டத்திலுள்ள சுங்கை
தீமா
தோட்டத்
தமிழ்ப்பள்ளியின்
2-ஆம் ஆண்டு விளையாட்டுப்
போட்டி
மிகவும்
சிறப்பாக
நடைபெற்றது. இப்போட்டி
விளையாட்டினைச்
சுங்காய்
வட்டாரத்தைச்
சேர்ந்த
தொழிலதிபர்
திரு.மோகன்
அபிமன்னன்
அதிகாரப்படியாகத்
தொடக்கி
வைத்தார். சிறு பள்ளியாக இருந்தாலும் பெரிய பள்ளியைப் போல விளையாட்டுப் போட்டியைச் சிறப்பாக நடத்தி பலருடைய பாராட்டினைப் பெற்றுள்ளது சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி.
இவ்விளையாட்டுப்
போட்டிக்கு
ஹிலிர்
பேராக்
மாவட்டத்
தமிழ்ப்பள்ளி
கண்காணிப்பாளர் குமரன் பெருமாள்,
நோவா ஸ்கோசியா
தமிழ்ப்பள்ளியின்
தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன்,
சுங்கை
தீமா
பள்ளியின்
முன்னாள்
மாணவர்கள், தோட்ட
மேலாளர், மாணவர்களின்
பெற்றோர்கள்,
சுற்று
வட்டார ஆசிரியர்கள்
எனப்
பல
தரப்பினர்
திரளாக வருகை
தந்து
ஆதரவு
தெரிவித்தனர்.
இப்பள்ளியின்
விளையாட்டுப்
போட்டியைச்
சிறப்பாக
ஏற்று
நடத்திய
ஆசிரியர்கள்,
நன்கொடை
வழங்கிய
நல்லுள்ளங்கள்,
பள்ளி
ஆசிரியர்களைச்
சிறப்பிக்கும்
வகையில்
அன்பளிப்பு
வழங்கிய
பள்ளியின்
முன்னாள்
மாணவர்கள்
என
அனைவருக்கும்
பள்ளியின்
தலைமையாசிரியர் பிரகாஷ்
தமது
மனமார்ந்த
நன்றியினைத்
தெரிவித்துக்
கொண்டார்.
பள்ளியில்
மாணவர்களின்
எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்
இனிவரும்
காலங்களில்
பள்ளியில்
பயிலும்
மாணவரை
ஊக்குவிக்கும்
வண்ணம்
ஒவ்வோர்
ஆண்டும்
பள்ளியின்
விளையாட்டுப்
போட்டி
சிறப்பாக
நடைபெறும்
என
பள்ளி
தலைமையாசிரியர்
உறுதியளித்தார்.
ஒரு
மாணவன்
ஒரு
விளையாட்டு
என்ற
கல்வி
அமைச்சின்
திட்டத்திற்கு
ஏற்ப
நடத்தப்படும்
இந்த
விளையாட்டுப்
போட்டியானது
மாணவர்களின்
திறனை
அடையாளம்
கண்டு
அவர்களை
வட்டாரம், மாநிலம், தேசிய நிலையிலான
போட்டிகளுக்குப்
பள்ளியின் நிகராளிகளாக
அனுப்புவதற்கு
வழிவக்குக்கின்றது.
சாதனை
படைக்க
எண்ணிக்கை
தேவையில்லை,
நம்பிக்கை
ஒன்றே
போதுமானது
எனத்
தலைமையாசிரியர்
வலியுறுத்தினார்.
கடந்த
மார்ச்சு
மாதம்
மாவட்ட நிலையில்
நடைபெற்ற
திடல்தட
போட்டியில்
இப்பள்ளியில்
மாணவர்கள்
கலந்து
கொண்டு
சிறந்த
அடைவுநிலையைப்
பெற்று
பள்ளிக்குப்
பெருமை
சேர்த்துள்ளனர்
என்பது
குறிப்பிடத்தக்கது.
சுங்கை
தீமா
தமிழ்ப்பள்ளியின்
விளையாட்டுப்
போட்டியில்
பச்சை
இல்லம்
முதல்
இடத்தில்
வாகை
சூடியது. வெற்றி
பெற்ற
மாணவர்களும்,
இல்லங்களுக்கும்
பரிசு
கேடயங்கள், சுழற்
கிண்ணங்கள்
வழங்கப்பட்டன.
இப்போட்டி
விளையாட்டில்
மற்றொரு
சிறப்பு
அம்சமாக
பள்ளிப்
பாடல்
வெளியீடு
நிகழ்ச்சி
நடைப்பெற்றது.
இப்பள்ளிப்
பாடலை
ஹிலிர்
பேராக்
மாவட்ட
தமிழ்ப்பள்ளியின்
கண்காணிப்பாளர் குமரன்
பெருமாள்
அவர்கள்
வெளியீடு
செய்தார். முதன்முறையாக
அறிமுகம்
கண்ட
பள்ளிப்
பாடல்
மாணவர்களுக்குத்
தன்முனைப்பு
அளிக்கும்
வகையில்
இருந்தது. இப்பாடலானது
சுங்கை
தீமா
தமிழ்ப்பள்ளிக்கு
ஓர்
அடையாளம் எனக் குமரன் புகழாரம் சூட்டினார்.
Comments
Post a Comment